Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Tuesday, 7 January 2014

ஏழு அணிகள், ஏழு வீரர்கள் கொண்ட ஏழு ஓவர் கிரிக்கெட்!



துபையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஐசிசி மற்றும் பிசிசிஐ ஆதரவுடன் 7 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த தொடருக்கு 7பிஎல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 7 அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.

7 அணிகளுக்கும் அபுதாபி, அஜ்மான், துபை, புஜைரா, சார்ஜா, ரசல்-ஹைமா, உம் அல்-கைவாய்ன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 7 வீரர்கள் மட்டும் தான் இடம் பெறுவார்கள். போட்டியும் 7 ஓவர்களை கொண்டதாக இருக்கும்.

இந்த கிரிக்கெட் போட்டி அறிமுக விழா இந்த வார இறுதியில் துபையில் நடக்கிறது. இதற்கான விழாவில் இந்திய அணியின் கேப்டன் டோனி, நட்சத்திர வீரர் ரெய்னா ஆகியோர் கலந்துகொண்டு போட்டி தொடர்பான அறிவுப்புகளை வெளியிடுகின்றனர். போட்டிகள் வரும் மார்ச் மாதம் துபையில் நடக்கிறது.

`நீ என்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறாய்?' - பெண்கள் ...



காதல் அரும்பிய புதிதில், காதலர்கள் பேசும் பேச்சில் நேரம் போவதே தெரியாது. அந்த பேச்சில் அவ்வளவு சுவாரசியம் இருக்கும்.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், அவ்வளவு நேரம் என்ன பேசினோம் என்றே தெரியாவிட்டாலும் கூட, அவர்கள் தொடர்ந்து எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். பெண்கள் பொதுவாக சுற்றி வளைத்துத்தான் பேசுவார்கள். ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டு வெளியே வேறு ஒன்றை பேசுவார்கள்.

`நீ என்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறாய்?' என்று காதலி கேட்டால், காதலனுக்குப் பிடிக்காத ஏதோ ஒன்றை அவள் செய்திருக்கிறாள் என்று அர்த்தம். அதை காதலன் ஜீரணித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தே இப்படி கேட்கிறாள்.

எதற்காக இப்படி ஒரு பெண் எதற்கெடுத்தாலும் மறைமுகமாகவே பேசுகிறாள்? பெண்கள் எப்போதும் தங்களது தேவைகளை நேரடியாக சொல்வதில்லை. அவற்றை மறைமுகமாக தெரிவிக்கவே விரும்புகிறார்கள். மேலும் புதியதொரு விஷயத்தைப் பற்றி ஊகித்துக் கொள்வதற்காகவும் இப்படி பேசுகிறார்கள்.

இதைப்பற்றி ஆழமாக சிந்தித்துப் பார்த்தால், அதில் பல ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன.

மற்றவர்களுடனான உறவை வளர்ப்பதற்கும், போர்க் குணம், எதிர்த்து நின்றல், பிடிவாதம் போன்றவற்றைத் தவிர்க்கவும் சுற்றிவளைத்து பேசுவது உதவுகிறது. மேலும் கருத்து வேறுபாட்டைத் தவிர்க்கவும், மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இணைந்து போகவும் செய்கிறது. சண்டை போடும் உணர்வு தோன்றாமல் இருக்கவும் இப்படி சுற்றி வளைத்துப் பேசுகிறார்கள்.

மறைமுகப்பேச்சை பெண்களுக்குள் பேசும்போது அவர்களுக்குள் புரிதல் ஏற்படுகிறது. பெண்கள் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்வதில் கெட்டிக்காரர்கள். ஆனால், இதையே ஆண்களிடம் அவர்கள் தெரிவிக்கும்போது எதிர்பார்த்து ஏமாந்து போகிறார்கள். பெண்கள் சுற்றி வளைத்துப் பேசுவதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் ஆண்களிடம் இல்லை. இதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் உண்டு.

ஆண்களின் மூளையானது வேட்டையாடுவது போல தனியொரு விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. ஆனால், பெண்களின் மூளை அமைப்பு அப்படி இருப்பதில்லை. அவர்களால் ஒரே நேரத்தில் 5 விதமான சிந்தனைகளில் கூட சுலபமாக ஈடுபட முடிகிறது. அதனால், ஆண்களுக்குப் பெண்களைப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. பெண்களின் பேச்சு ஒரு கட்டுக்கோப்பாக இல்லை, எந்த ஒரு நோக்கமும் அதில் இருப்பதில்லை என்பது போல ஒரு குழப்பத்தை ஆண்களுக்கு உண்டாக்கும். அதனால், பெண்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகின்றன. அவர்களை ஆண்கள் அடிக்கடி குற்றஞ்சாட்டுகின்றனர்.

பெண்களின் மறைமுகப்பேச்சு தொழில் புரியும் இடத்தில் பிரச்சினைகளை உருவாக்கக்கூடும். அங்கு நேரிடையான விளக்கங்கள் தான் தேவை. அப்போதுதான் தகவல்கள் எந்த வித குழப்பமும் இன்றி தேவையானவர்களிடம் ஒழுங்காகப் போய்ச்சேரும்.

அதேபோல் ஒரு பெண் ஆணிடம் தொழில் சம்பந்தமாக ஏதாவது பேசினால், அந்த ஆணுக்கு அவள் என்ன பேசினாள் என்பது புரியாவிட்டாலும் கூட, அவன் புரிந்து கொண்டதைப் போலத் தலையாட்டி விடுகிறான். இதைப் பெண் உணர்ந்து கொள்ள வேண்டும். அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கு அவளது மேலதிகாரி ஆணாக இருக்கும்பட்சத்தில், அந்த பெண் தனது கோரிக்கையை அவரிடம் கூறும்போது அவர் ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உண்டாகிறது. இதற்கு காரணம் பெண்களின் மறைமுகப்பேச்சு தான். அதனால்தான் ஆண்களின் பார்வையில், பெண்கள் சுற்றி வளைத்துப் பேசுபவர் களாகத் தெரிகிறார்கள்.

‘கேம்பஸ் இண்டர்வியூ’ – அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!



கேம்பஸ் இண்டர்வியூ’ – இன்றைய நிலையில் மாணவர்கள் ஒரு கல்லூரியை தேர்ந்தெடுப்பதற்கு இதுதான் மந்திரச்சொல். மாணவர்களுக்கு மட்டுமல்ல… கல்லூரிகளுக்கும் இதுதான் தூண்டில் முள். ‘எங்கள் கல்லூரியில் கடந்த ஆண்டு கேம்பஸில் தேர்வானவர்கள் 500 பேர்’ என்றெல்லாம் விளம்பரப்படுத்திதான் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களை சேர்க்கிறார்கள். படிப்பு முடியும் முன்னரே அப்பாய்ண்மென்ட் ஆர்டரை கையில் வாங்கும் இந்த கேம்பஸ் மோகத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் மயங்கிக் கிடக்கிறார்கள். அவர்களின் மயக்கத்தில் மருந்து தெளித்திருக்கிறது அண்மையில் வெளியான அந்த செய்தி.

‘ஹெச்.சி.எல். நிறுவனத்தில் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வாகி ஆண்டுக் கணக்கில் காத்திருக்கும் 59 மாணவர்கள் சென்னையில் உண்ணாவிரதம்’ என்ற செய்தி மாணவர்கள், பெற்றோர்கள், கல்லூரிகள் என அனைத்துத் தரப்பினரிடையேயும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி இருக்கிறது. சென்னையில் மட்டுமல்ல… பெங்களூரு, நொய்டா, டெல்லி என நாட்டின் இதரப் பகுதிகளிலும் இதேபோன்ற போராட்டங்களை மாணவர்கள் நடத்தத் துவங்கியுள்ளனர்.

“ஆர்டரை மட்டும் வைத்துக்கொண்டு ஆண்டுக் கணக்கில் காத்திருக்கிறோம். இதனால் வேறு வேலைக்கும் செல்ல முடியவில்லை. எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்கள்’’ என்ற அவர்களின் கோபம் மிக நியாயமானது. இது அவர்களின் குரல் மட்டுமல்ல… ஒவ்வொரு ஆண்டும் கேம்பஸ் மூலம் தேர்வாகி காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் குரலும் கூட‌. கேம்பஸ் என்ற ஜிகினா பொம்மையின் உண்மை முகம் வெளியில் வரத் துவங்கியுள்ளது. உண்மை நிலை என்ன? கேம்பஸில் தேர்வாகியும் வேலை கிடைக்காமல் தாமதம் ஆவது ஏன்? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறார் ஐ.டி. துறையில் பணிபுரிபவரும், ‘சேவ் தமிழ்ஸ்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான செந்தில்.

“பொதுவாகப் பார்த்தால் கேம்பஸ் இண்டர்வியூ என்பது மாணவர்களுக்கு வசதியானது போல தோன்றும். நிறுவனங்களும், கல்லூரிகளும் மாணவர்களின் நலனுக்காக தேடிவந்து வேலை தருகிறார்கள் என்பதைப் போன்ற எண்ணம் வரும். ஆனால் உண்மை அதுவல்ல. கேம்பஸ் இண்டர்வியூவினால் நிறுவனங்களுக்குதான் லாபம். அவர்கள் தங்களுக்குத் தேவையான தகுதியான ஊழியர்களை எந்த அலைச்சலும் இல்லாமல் ஒரே இடத்தில் இருந்து சலித்து எடுத்துக்கொள்கிறார்கள். புகழ்பெற்ற முன்னணி கல்லூரிகளுக்கு மட்டும்தான் கேம்பஸ் இண்டர்வியூ நடத்த வருகிறார்கள். அங்கு +2-வில் நல்ல மதிப்பெண் எடுத்தவர்கள்தான் படிப்பார்கள் என்பதால், தரமான ஊழியர்கள் கிடைத்துவிடுகின்றனர்.

கல்லூரிகளை பொருத்தவரை ‘கேம்பஸ் இண்டர்வியூ’ என்பது பெரிய வரப்பிரசாதம். சக போட்டிக் கல்லூரிகளை விட ஒவ்வொரு ஆண்டும் தங்கள் கல்லூரியில் இருந்துதான் அதிகம் பேர் கேம்பஸ் மூலம் வேலை பெறுகிறார்கள் என்று காட்டிதான் அடுத்த ஆண்டுக்கான மாணவர்களை சேர்க்கின்றனர். ஆகவே இதை ஒரு சலுகையாகவோ, மாணவர்களுக்கு வழங்கும் சிறப்பு ஏற்பாடாகவோ கருத வேண்டியது இல்லை.

இப்போதைய பிரச்னை எதனால் உருவாகிறது? கேம்பஸ் மூலம் வேலைக்கு எடுத்துவிட்டு பிறகு வேலை தராமல் இழுத்தடிப்பது எதனால்? கல்லூரிகளை பொருத்தவரை டோட்-1 கல்லூரிகள், டோட்-2 கல்லூரிகள் என இரண்டு வகை உண்டு. டோட்-1 என்பது அண்ணா பல்கலைக்கழகம், பி.எஸ்.ஜி. போன்ற முன்னணி கல்லூரிகளை உள்ளடக்கியது. நிறுவனங்கள், கேம்பஸ் இண்டர்வியூவுக்கு முதலில் வருவது இந்த கல்லூரிகளுக்குதான். டோட்-2 கல்லூரிகள் என்பவை இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள சாதாரண கல்லூரிகள். இங்கு கேம்பஸ் நடத்த எந்த நிறுவனமும் வருவதில்லை. கல்லூரிகள் கெஞ்சி, கூத்தாடிதான் நிறுவனங்களை அழைத்து வருகின்றன.

இந்த டோட்-2 கல்லூரிகளில் தேர்வாகும் மாணவர்களுக்குதான் தற்போது பிரச்னை வருகிறது. நாடு முழுவதும் கேம்பஸில் தேர்வாகி வேலை தராமல் இழுத்தடிக்கப்படுவதில் டோட்-2 கல்லூரி மாணவர்கள்தான் அதிகம். இவர்கள் யார் என்று பார்த்தால், பெரும்பாலும் கீழ் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த, கிராமப்புற மாணவர்களாக இருக்கின்றனர். எப்படியேனும் பொறியியல் படித்தால் எதிர்காலம் வளமாகிவிடும் என்று நம்பி சொத்துகளை விற்று படிப்பவர்கள் இவர்கள். எல்லோருமே நன்றாக படிப்பவர்கள்தான். அதனால்தான் கேம்பஸில் தேர்வாகியுள்ளனர். ஆனாலும் நிறுவனங்கள் இவர்களை மட்டும் அலைகழிப்பது எதனால்? அதற்கு ஐ.டி. நிறுவனங்கள் செயல்படும் முறையை தெரிந்துகொள்ள வேண்டும்.

ஐ.டி. நிறுவனங்களை பொருத்தவரை ஊழியர் எண்ணிக்கையும் அவர்களுக்கு ஒரு சொத்துதான். ‘எங்களிடம் 2 லட்சம் ஊழியர்கள் இருக்கிறார்கள்; 3 லட்சம் ஊழியர்கள் இருக்கிறார்கள்’ என்று கணக்கு காட்டிதான் நிறுவனங்கள் புராஜெக்ட் பிடிக்கின்றன. அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் பேரை வேலைக்கு எடுக்கிறார்கள். இந்த நிலையில் அமெரிக்க பொருளாதார தேக்கநிலை, ஐரோப்பிய பொருளாதார வீழ்ச்சி என பல காரணங்களால் எதிர்பார்த்த அளவில் புராஜெக்டுகள் கிடைக்காமல் போகலாம். அத்தகைய சூழலில் நிறுவனங்கள், அனுபவம்மிக்க மூத்த ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப முடியாது என்பதால், புதிய ஊழியர்களை வேலைக்கு எடுப்பதை தள்ளிப்போடுகின்றன. அல்லது வேலைக்கே எடுக்காமல் தட்டிக்கழிக்கின்றன. அப்படியே வேலைக்கு எடுத்தாலும் டோட்-1 கல்லூரிகளுக்கு முன்னுரிமைக் கொடுத்துவிட்டு கடைசியாகவே டோட்-2 கல்லூரிகளுக்கு வருகிறார்கள். இதுதான் தற்போதைய பிரச்னையின் நதிமூலம்” என்கிறார் செந்தில்.

ஹெ.சி.எல். நிறுவனத்தில் மட்டும் 2013-ம் ஆண்டின் நிலவரப்படி இந்தியா முழுவதும் 6,000 பேர் கேம்பஸில் தேர்வாகி வேலை கிடைக்காமல் உள்ளனர். இவர்கள் ஃபேஸ்புக்கில் எதேச்சையாக ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி ஒரு ரகசிய குழுமம் ஒன்றை உருவாக்கி ஒருங்கிணைந்துள்ளனர். அதன் வழியேதான் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தியுள்ளனர். இதேபோல இதர நிறுவனங்களையும் கணக்கிட்டால், இப்படி வேலைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது 1 லட்சத்தைத் தாண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். இவர்கள் அனைவரும் இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை, நடுத்தர வர்க்கத்து குடும்பங்களின் பிள்ளைகள். இந்தப் பிரச்னை குறித்து பேச, ஃபேஸ்புக்கில் ‘நாலெட்ஜ் புரொஃபஷனல்ஸ் ஃபோரம்’ என்ற பெயரில் குழு ஒன்று இயங்குகிறது. அதைச் சேர்ந்த சுதிர் என்பவரிடம் பேசியபோது…

“ஒருமுறை கேம்பஸ் இண்டர்வியூவில் கலந்துகொண்டு ஒரு நிறுவனத்தில் தேர்வாகிவிட்டால் கல்லூரி முடியும்வரை வேறு நிறுவனத்தின் கேம்பஸில் கலந்துகொள்ள முடியாது. எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுதான் இது. ஆனால் திறமையாக பங்கேற்று முதல் முயற்சியிலேயே ஆர்டர் வாங்கியவர்கள் வருடக்கணக்கில் காத்திருக்க… அதன்பிறகு கேம்பஸில் தேர்வானவர்கள் எல்லாம் மிக நல்ல வேலையில் சேர்ந்துவிட்டனர். இவர்கள் ஏமாளிகளாக காத்திருக்கிறார்கள்.

நாளை வேறு நிறுவனங்களுக்கு வேலைக்குப் போனால் ‘நீங்க ஃப்ரெஷ்ஷரா? அல்லது எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறதா’ என கேட்பார்கள். ஃப்ரெஷ்ஷர் என்றால் பிரச்னை இல்லை, வேலையில் சேர்ந்துவிடலாம். ‘வெட்டியாக வேலைக்காக காத்திருந்தோம்’ என்று சொன்னால் எந்த நிறுவனத்திலும் உடனே வேலை தர மறுப்பார்கள். அப்படியே வேலை கொடுத்தாலும் ஜூனியர்களுடன் போட்டிப் போட வேண்டும். ஒவ்வொரு கல்லூரியிலும் நன்றாக படிக்கும் மிகச் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்க்கையை சிதைக்கின்றனர்” என்று அதிர்ச்சியான இன்னொரு முகத்தை சொல்கிறார்.

எனில், இதில் கல்லூரியின் பொறுப்பு என்ன? கேம்பஸ் மூலம் தேர்வான மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் அது கல்லூரியின் நற்பெயருக்கு களங்கம்தானே… அதற்காகவேனும் அவர்கள் இதில் தலையிடலாம்தானே… என்று கேட்கலாம். ஆனால் யதார்த்தம் என்னவெனில் கல்லூரிகள், நிறுவனங்களை கெஞ்சி கூத்தாடிதான் கேம்பஸ் இண்டர்வியூவுக்கு அழைத்து வருகின்றன. ஆகவே ‘ஏன் வேலை கொடுக்கவில்லை?’ என்று கேட்க முடியாது. கேட்டால் அடுத்த ஆண்டு கேம்பஸுக்கு வரமாட்டார்கள். இதனால் கல்லூரிகள் இதைப்பற்றி கண்டுகொள்வது இல்லை.

10 ஆயிரம் ரூபாய்க்கு வாஷிங்மெஷின் விற்பவன் கூட ஒரு வருடத்துக்கு வாரண்டி கொடுக்கிறான். 10 லட்சம், 20 லட்சம் கட்டி நமக்கு பொறியியல் படிப்பை விற்கும் கல்லூரிகள், படிப்பு முடிந்ததும் கொஞ்சம் கூட கண்டுகொள்வது இல்லை. ஆனால் எந்த கூச்சமும் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் ‘எங்கள் கல்லூரியில் இருந்து இவ்வளவு பேர் கேம்பஸ் மூலம் தேர்வாகியுள்ளனர்’ என்று விளம்பரப்படுத்திக்கொள்கிறார்கள். அதில் எத்தனை பேர் வேலையில் சேர்ந்துள்ளனர் என்று கேட்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது.

இந்த நிலைமை குறித்து மாணவர்கள் வெளிப்படையாக பேசவும் முடியாது. அப்படி பேசினால் பிறகு எந்த நிறுவனத்திலும் வேலை கிடைக்காது. ஒரு ஐ.டி. முதலாளிக்கு பிரச்னை என்றால் மற்றவர்கள் ஒன்று கூடிக்கொள்வார்கள். அவர்களுக்கு என ‘நாஸ்காம்’ சங்கம் இருக்கிறது. மாணவர்களுக்கு இத்தகைய அமைப்புகள் எதுவும் இல்லை.

“இதுதான் ஐ.டி. துறையின் உண்மையான பிரச்னை. பொதுவாக ஒரு நிறுவனத்தில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு இவை எல்லாம் ஒரு பொது விதிக்கு உட்பட்டு நடக்கும். ‘இத்தனை வருட அனுபவம் உள்ளவர்களுக்கு இத்தனை சதவிகிதம் சம்பள உயர்வு’ என்று இருக்கும். ஐ.டி. துறையில் மட்டும் ஒவ்வொரு ஊழியரையும் தனித்தனியே அழைத்து ரகசியம் போல பேசுவார்கள். இந்த வெளிப்படையற்றத்தன்மைதான் எல்லாவற்றுக்கும் காரணம். இப்படி செய்வதன் மூலம் எல்லா ஊழியர்களையும் தனித்தனியே பிரித்து வைக்கிறார்கள். ஒருபோதும் இவர்கள் ஒன்று சேர்வது இல்லை.” என்கிறார் ‘சேவ் தமிழ்ஸ்’ செந்தில்.

இந்த ‘கேம்பஸ் இண்டர்வியூ’ என்பதன் உண்மை அபாயத்தை வேறொரு கோணத்தில் இருந்தும் புரிந்துகொள்ள வேண்டும். கல்லூரிப் படிப்பு என்பது வெறுமனே வேலைக்கு ஆட்களை தயார் செய்யும் பட்டறை அல்ல. அது சுயமாக சிந்திக்கவும், சமூகத்தை சொந்த அறிவுடன் அணுகவும் கற்றுத்தரும் இடம். உலகம் முழுவதும் மாணவர்கள் அரசியல் அறிவு பெறும் இடம் கல்லூரிதான். இந்த கேம்பஸ் இண்டர்வியூ என்பதோ, மாணவர்களிடம் இருந்து சமூக உணர்வை துண்டிக்கிறது. மண்டை முழுக்க ‘கேம்பஸ் இண்டர்வியூ’வில் வேலை பெறுவது மட்டுமே சுற்றிக்கொண்டிருக்கிறது. ‘நன்றாக படி, வேலைக்குப் போ, சம்பாதி, கடன் வாங்கு, வீடு வாங்கு, கார் வாங்கு, இ.எம்.ஐ. கட்டு, செத்துப்போ’ என வாழ்க்கை முழுவதும் ஓர் இயந்திரத்தைப் போல சிந்திப்பதற்கான மூளையை கல்லூரியிலேயே தயார் செய்கிறார்கள்.

இந்தப் பிரச்னையில் மிக முக்கியமானது கல்விக்கடன். இலவச கல்வியை கை கழுவிவிட்ட காங்கிரஸ் அரசு, கல்விக்கடன் வழங்குவதை பெரிய திருவிழா போல கொண்டாடுகிறது. ப.சிதம்பரம் இதை முனைப்புடன் செய்கிறார். ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் பேர் பொறியியல் முடித்து வெளியில் வருகிறார்கள் என்றால் ஒரு லட்சம் பேர் கடனாளிகளாக வருகிறார்கள் என்று அர்த்தம். கல்லூரி முடித்த முதலாம் ஆண்டு முடிவில் இருந்து கல்விக்கடனை திருப்பிச் செலுத்தியாக வேண்டும். ‘கேம்பஸில் எப்படியேனும் தேர்வாகிவிட வேண்டும்’ என மாணவர்கள் துடிப்பதற்கு இதுவும் ஓர் முக்கியமான காரணம். ஒரு பக்கம் கல்விக் கடன் நெருக்க… மறுபக்கம் கைக்கு எட்டிய வேலை வாய்க்கு எட்டுவதில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து இறங்கு முகத்தில் செல்லும் நிலையில், இந்த அபாயமான போக்கு இனிவரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கக்கூடும்.

‘இதற்கு நிறுவனங்கள் என்ன செய்யும்? அவர்களுக்கு எதிர்பார்த்தது போல ஆர்டர் கிடைத்திருந்தால் வேலைக்கு எடுத்திருப்பார்கள். கிடைக்கவில்லை; எடுக்கவில்லை’ என்று சிலர் சொல்லலாம். அது உண்மையல்ல.. என்னதான் ஆர்டர் குறைந்திருந்த போதிலும் ஐ.டி. நிறுவனங்களின் லாப விகிதம் எப்போதும் போல, ஆண்டுக்கு 35 சதவிகிதம் என்ற அளவில் தொடர்கிறது. அந்த லாபத்தின் சிறு பகுதியையும் இழக்க முதலாளிகள் தயார் இல்லை. இந்த லாபவெறியின் பலியாடுகள்தான் அப்பாய்ண்மென்ட் ஆர்டருடன் காத்திருக்கும் மாணவர்கள்!

அவசரப்படாதே.! கொஞ்சம் பொறுமையா இரு.!




*ஒரு வீட்டில் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

" இதோ பாருங்க.......... உங்களுக்கு கொஞ்சமாவது கவலை இருக்கா. "
" என்ன சொல்றே?
நம்ம பொண்ணுக்கு வயசாகிகிட்டே போகுது. காலாகாலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டாமா?

அவசரப்படாதே. கொஞ்சம் பொறுமையா இரு. நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். ஒருத்தனும் சரியாய் வரலை. கொஞ்சமாவது கண்ணுக்கு லெச்சணமா, பார்க்கிறதுக்கு அழகா, சுயமாய் சம்பாதிக்கிற ஒரு பையன் கிடைக்க வேண்டாமா.

எங்க அப்பா இப்படியெல்லாம் பார்த்திருந்தா எனக்கு கல்யாணமே ஆகி இருக்காது.

கணவர் கப் சிப் ............. ஆகிறார். இந்த நேரத்தில் மகள் உள்ளே வருகிறாள். அவள் பின்னாடியே ஒரு இளைஞன்.
அப்பா...
என்னம்மா... யார் இந்த பையன்
இவர்தாம்பா அவர்
அவர் ...ன்னா
அதுதான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே. அவர்தான் இவர். இவரைத்தான் கல்யாணம் செய்துக்க விரும்புறேன்.

அப்படியா வாப்பா..உட்கார்.
உட்கார்ந்தான்.
உன் கிட்டே சில கேள்விகள் கேட்கலாமா
தாராளாமாய் கேளுங்க. அதுக்காகத்தானே வந்து இருக்கேன்.

இப்போ நீ என்ன செய்துகிட்டு இருக்கே
கடவுளை பற்றி ஆராச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.

அப்படின்னா... உன் எதிர்காலம் பற்றி என்ன திட்டம் போட்டு வச்சு இருக்கே ?
கடவுள் எல்லாத்தையும் கவனித்து கொள்வார்.

சரி உனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பிறக்குது. அப்பறம் என்ன செய்வே
அதையும் கடவுள் கவனிச்சுக்குவார்.

சரி போயிட்டு வா .... அவன் நம்பிக்கையோடு புறப்பட்டு போனான்.

அவன் போன பிறகு அம்மா கேட்டாள்.... பையன் எப்படி?

அப்பா சொன்னார். இவனிடம் பணமும் இல்லை. வேலையும் இல்லை. ஆனால் என்னை மட்டும் கடவுளாக நினைத்து கொண்டிருக்கிறான்.

விசா வாங்க வழிகாட்டும் ஈசியான இணையதளம்!




வெளிநாட்டு பயணங்களை திட்டமிடும் போது எழக்கூடிய முக்கிய கேள்வி , விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை. முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணபிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை.

 ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொறுத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது. குறிப்பிட்ட சில நாடுகள் சில நாடுகளுக்கு மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.இந்த தகவல்களை எல்லாம் இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடாமல், ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம்
(http://www.visamapper.com/ ) இணையதளம் அமைந்துள்ளது.

எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமால் செல்லலாம், எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் அங்கே போய் சாவகாசமாக விசா வாங்கலாம் போன்ற தகவல்களை இந்த தளம் தருகிறது. அதுவும் எப்படி, அதிகம் தேடாமல் எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் அழகாக உலக வரைப்படத்தின் மீது விசா விவரங்களை புரிய வைக்கிறது. இந்த தளத்தில் தோன்றும் உலக வரைபடத்தில் நாடுகள் பல்வேறு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அந்த வண்ணங்களுக்கான அர்த்தம் அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இண்ட வண்ணங்களை வைத்தே குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பச்சை வண்ணத்தில் மின்னும் நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம். மெரூன் நிறம் என்றால் முன்னதாகவே விசா பெற வேண்டும். வெளீர் பச்சை என்றால் விசாவே வேண்டாம். மஞசள் வண்ணம் என்றால் அன்லைனில் விண்ணபிக்கலாம். சிவப்பு என்றால் விசாவே கிடையாது.

ஆக, இந்த வரைபடத்தை பார்த்தே ஒருவர் பயணம் செய்ய உள்ள நாட்டிறகான விசா முறை என்ன என அறிந்து கொள்ளலாம். இந்த வரைபடத்தில் மேலும் ஒரு சிறப்பம்சம் , நீங்கள் தேடக்கூட வேண்டாம், அதுவாகவே விவரங்களை காட்டுகிறது என்பது தான்.

அதாவது இந்த தளத்தில் நுழைந்ததுமே ,பயனாளி எந்த நாட்டின் குடிமகன் என புரிந்து கொண்டு அந்த நாட்டுக்கான விசா நடைமுறையை வரைபடமாக காட்டுகிறது. உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது ,இந்தியாவுக்கான இடம் குடியிருக்கும் நாடு என காட்டப்படுகிறது. இந்தியர்களுக்கு மற்ற நாடுகள் எப்படி விசா தருகின்றன என்பது வண்ணங்களாக காட்டப்படுகிறது. ஆக, பயனாளி வேறு நாட்டில் இருந்து அணுகும் போது அவரது நாட்டுக்கான விசா வரைபடம் தோன்றும். அற்புதம் தான் இல்லையா?

அதே நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, ’நான் இந்த நாட்டு குடிமகன்’ என குறிக்கும் கட்டத்தில் ஒருவர் தனக்கான நாட்டை தேர்வு செய்து பார்த்தால் அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். இந்த பகுதியில் பல்வேறு நாடுகளை கிளிக் செய்து பார்த்தால் எந்த எந்த நாடுகள் எந்த எந்த நாடுகளுக்கு விசா சலுகை அளிக்கின்றன என்ற தகவலையும் தெரிந்து கொள்ளலாம். உலக அரசியலை அறிவதற்கான சின்ன ஆய்வாகவும் இது அமையும். உலக அரசியல் யாதார்த்ததையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விசா பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும். ஆனால் ஒன்று இது ஒரு வழிகாட்டி தளமே. இதில் உள்ள விவரங்களை அதிகாரபூர்வமானதாக கொள்வதற்கில்லை. தகவலை எளிதாக தெரிந்து கொண்டு அதனை அதிகார்பூர்வ தளங்களின் வாயிலாக உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும் இந்த தளத்திலேயே, விடுபட்டிருக்கும் நாட்டை சேர்கக அல்லது பிழையான தகவலை சரி செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இதே போலவே விசாமேப்.நெட்
(http://www.visamap.net/) எனும் இணையதளமும் விசா தொடர்பான தகவல்களை வரைபடம் மூலம் தருகிறது. விசா தகவல்களோடு தூதரக அலுலகங்கள் எங்கே உள்ளன போன்ற தகவல்களையும் அளிக்கிறது. விசா நோக்கில் பிரபலமான நாடுகளின் பட்டியலும் இருக்கிறது. ஐபோனுக்கான செயலி வடிவமும் இருக்கிறது. ஆனால் இந்த தளமும் வழிகாட்டி நோக்கிலானது தான். இதில் உள்ள தகவல்கள் உறுதி செய்து கொள்ளப்பட வேண்டும்.

பெண்கள் ரயிலில் பாதுகாப்பு குறித்து புகார் தெரிவிக்க தனி இ-மெயில்!




ரயில் நிலையங்களிலும், ஓடும் ரயிலிலும் பயணிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் புகார் தெரிவிக்க பிரத்யேக இணையதளத்தைத் தொடங்கியுள்ளது ரயில்வே பாதுகாப்புப் படை.அத்துடன் பயணிகள் தங்கள் குறை களை ஹெல்ப் லைன்களிலும் (90031 61710, 044-25353999) தெரிவிக்கலாம்.மேலும் முக்கியமான 20 ரயில் நிலையங்களில் புகார் மற்றும் ஆலோசனைப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரை – தாம்பரம், சென்னை கடற்கரை – வேளச்சேரி, சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் – அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி மார்க்கங்களில் தற்போது இரவு நேரத்தில் 96 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. அப்போது பெரும்பாலும் போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் பெண்களை கேலி செய்வது, செயின் பறிப்பு போன்ற அசம்பாவிதங்கள் நடப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து இரவுநேர மின்சார ரயில்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை, சென்ட்ரல், மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ், எழும்பூர், மேற்கு மாம்பலம், தாம்பரம், பரங்கிமலை, திருவள் ளூர், அரக்கோணம், கும்மிடிப் பூண்டி, எண்ணூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் புகார் மற்றும் ஆலோசனைப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

பயணிகளுக்கு குறிப்பாக பெண் களுக்கு ஏதாவது அசெளகரியம் ஏற்பட்டால் புகார் தெரிவிக்க rpfsakthipadai@gmail.com என்ற இ-மெயில் முகவரியை ரயில்வே பாதுகாப்புப் படை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து முதுநிலை கோட்ட ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் எஸ்.ஆர்.காந்தி,”பயணிகள் குறிப்பாக பெண் பயணிகளின் குறைகளைப் போக்க முக்கியமான 20 ரயில் நிலையங்களில் ஆலோசனைப் பெட்டிகளை வைத்துள்ளோம். அது போல தனி மின்னஞ்சல் முக வரியை ஏற்படுத்தியுள்ளோம்.

புறநகர் மின்சார ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்யும்போது திருநங்கைகள் தொந்தரவு, பாலியல் துன்புறுத் தல், கேலி, கிண்டல் போன்ற பாதுகாப்பு தொடர்பான புகார்கள் மட்டுமல்லாமல் ரயில் பெட்டி களை சுத்தம் செய்யாததால் குப்பைகள் அதிகமாக இருப்பது, மின்விசிறிகள் ஓடாமலும், மின்விளக்குகள் எரியாமலும் இருப்பது குறித்து புகார் கொடுக்கலாம்.

புகார் மற்றும் ஆலோசனைப் பெட்டிகளை சம்பந்தப்பட்ட ரயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் தினமும் திறந்து பார்த்து அதிலுள்ள மனுக்களை எங்கள் அலுவலகத்துக்கு அனுப்பு வார். பாதுகாப்பு தொடர்பான புகார் என்றால், விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடப்படும்.

ரயில்வேயின் மற்ற துறை கள் தொடர்பான புகாராக இருந் தால், உரிய துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப் படும். நடவடிக்கை எடுத்த பிறகு அதுபற்றி புகார்தாரருக்கும் தெரிவிக்கப்படும்

இந்தப் பெயர்கள் எப்படி வந்தன.?



சஹாரா:

“சஹாரா’ என்னும் சொல்லுக்கு அரேபிய மொழியில் “பாலைவனம்’ என்று பொருள்.


“ஆரஞ்ச்’ வந்த வழி:

வடமொழியில் “நருகுங்கோ’ (NAGRUNGO) ஆக இருந்து இந்துஸ்தானியில் “நாருங்கோ’ ஆகி உருதுவில் நாரஞ்சாகி, இத்தாலியில் “ஆரஞ்சியா’வாகி ஆங்கிலத்தில் “ஆரஞ்ச்’ ஆகிவிட்டது இந்த ORANGE.


தாய் + தந்தை:

தாய், தந்தை என்ற பெயர்களுக்குக் காரணம் என்ன தெரியுமா? குழந்தையைத் தாவி எடுத்துத் தழுவுதலால் “தாய்’ என்று பெயர் வந்தது. அதேபோல குழந்தையைத் தந்த தலைவன் தந்தை. தந்த + ஐ இரண்டும் சேர்ந்தது “தந்தை’ ஆனது.


உதகமண்டலம்:

தோடர்கள் மலைப்பகுதிகளில் வாழ்கிறார்கள். இவர்கள் குடிசைகள் இருக்கும் பகுதிகளுக்கு “மந்து’ என்று பெயர். உதகையில் இவர்கள் குடிசைகள் இருக்கின்றன. இதற்கு “உத மந்து’ என்று பெயர். இதனால்தான் இந்தப் பகுதிக்கு “உதகமண்ட்’ என்றும் “உதக மண்டலம்’ என்றும் பெயர் வந்தது.


காகிதம்:

“காகிதம்’ என்பது தமிழ்ச் சொல் அல்ல. அரபுச் சொல். “காகஸ்’ என்ற அரபுச் சொல்தான் தமிழில் “காகிதம்’ என்று வழங்கப்படுகின்றது.


திங்கள்:

திங்கள் என்றால் “சந்திரன்’. வானத்தில் தோன்றி, வளர்ந்து, தேய்ந்து, மறையும்வரை உள்ள கால அளவே “திங்கள்’ அல்லது “மாதம்’ ஆகும்.


கிருதா:

“கிருதா’ என்ற சொல் “கிர்தா’ என்ற உருதுச் சொல்லிலிருந்து வந்தது.


சர்க்கரை:

சர்க்கரை என்ற சொல் “சொர சொரப்பு’ என்று வழங்குவதால் சர்க்கரை. இது “ஜர்ஜரா’ என்ற வடசொல்லின் திரிபு.


டொபாக்கோ (புகையிலை):

ஊதல், உண்ணல், உறிஞ்சல் ஆகிய மூன்றுக்கும் பயன்படுவது புகையிலை. இந்த இலைக்கு டொபாக்கோ என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? இந்த இலையைப் போட்டு சிவப்பிந்தியர்கள் புகை பிடிப்பதை வால்டர் ராலே என்பவர் முதன்முதலாகப் பார்த்து அறிந்துகொண்டார். இந்த இலைகளைச் சுருட்டி வாயில் வைத்துப் புகைத்தால் அந்தப் புகையை இழுப்பது சுவாரஸ்யமாக இருக்கும் என்பதை சிவப்பிந்தியர்கள்தான் முதன் முதலாகக் கண்டுபிடித்தனர்.

 இலைகளை அம்மாதிரி சுருட்டுவதை அவர்கள் தங்கள் மொழியில் “டோபாகோ’ என்று அழைத்தனர். அதுவே நாளடைவில் டொபாக்கோ என்று மருவி விட்டது.


பஞ்சாங்கம்:

கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம் – இவைகள் அடங்கியதுதான் “பஞ்சாங்கம்’. பஞ்ச் என்றால் ஐந்து. அங்கம் -பங்கு வகிப்பது; இடம்பெறுவது.

முதலில் சொன்ன ஐந்தும் அங்கம் வகிப்பதால் “பஞ்சாங்கம்’ என்று பெயர் வந்தது.

ஆலமரம்:

ஆலமரத்துக்கு ஆங்கிலத்தில் “பன்யன்’ என்று பெயர். பனியன் என்னும் சில வியாபாரிகள் பாரசீக வளைகுடாவில் “பந்ரா அப்பாஸ்’ என்னும் துறைமுகத்துக்கு அருகில் இருந்த ஒரு ஆலமரத்தின் அடியில் கோயில் கட்டி வழிபட்டு வந்தார்கள் என்றும்,
அதனால் அந்த மரத்துக்கு பன்யன் என்ற பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள்

பூப்பு நீராட்டு - ஒரு வரலாற்று பார்வை....!



புதிய உலகத்தில்
பெரியமனுசியாய்
கடமைகளுடன்
கால்தடம் பதிக்கிறாய்.
வா.
பெருமையுடனும்
மரியாதையுடனும்
வலிமை பொங்க
நடந்து வா.
இன்று முதல்
நீ -
நம் மக்களின் தாய்.
நம் தேசத்தின் தாய்.



பெண்ணின் பூப்படைதலைப் பெருமையுடன் பாடும் அப்பச்சி (Apache) இனக்குழு மக்களின் பாடல் இது.


பெண் பூப்படைதல் என்பது பல்வேறு இனக்குழு மக்களின் வாழ்க்கையில் கொண்டாட்டத்திற்குரிய சடங்காகவே இருந்து வந்துள்ளது. பூப்பு என்பது தீட்டு, விலக்கு, தீண்டத்தாகதது என்று எதிர்மறையாக நோக்கப்படவில்லை. பூப்பு என்ற சொல் தொடர்ச்சியாக வண்டு நுகர்தல், பிஞ்சு, காய், கனி, என்ற பிம்பங்களை மட்டுமே உருவாக்கி அதன் வழி இனவிருத்திக்கு காரணமான நேர்மறைச் செயலாகவே கருதப்பட்டது. ஆரிய இனப்பண்பாட்டின் தாக்கமும் வைதீகமும் ஆண் சமுதாயமும் கலந்து பெண்ணை அடிமைப்படுத்த முனைந்த காலத்தில் தான் பூப்பு என்ற செயல் "தீட்டாகிப்" போனது.

மனித வரலாற்றில் இனவிருத்தியின் நிலமாக இருந்தப் பெண்ணின் ஆளுமையைக் கண்டு வியந்து அச்சம் கொண்டு அவள் தலைமையை ஏற்றுக்கொண்ட இனக்குழு வாழ்க்கையில் பெண் தெய்வ வழிபாடே இருந்தது என்பதும் இன்றும் சிவப்பு நிறமும் நெற்றியில் இடப்படும் குங்குமச் சிவப்பும் ரத்தப் பலியிடலும் ஆகிய சடங்குகளின் காரணத்தை ஆராயப் புகுந்தால் பூப்பு என்ற சடங்கின் வேர்களை அடையாளம் காண முடியும். நிலமும் நிலம் சார்ந்த மருதமும் இனக்குழு வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்களில் குறிப்பிடத்தக்கது.

பெண் -இல்லாள் என்றும் மனைமாட்சி என்றும் மாற்றம் பெற்ற காலம். பூப்பு பெண்ணின் ஆளுமையாக இருந்தது மறைந்து இனவிருத்திக்கான அடையாளமாக மட்டுமே சுருங்கிய காலம்.

ஆண் -பூப்படைதல் சடங்கு

ஆணுக்கான சடங்குகள் அனைத்தும் போர், வேளாண்மை, அரசாட்சி என்று சமூக ஆள்வினைக்கான சடங்குகளாகவும் பெண்ணுக்கான சடங்குகள் அனைத்தும் பாலியல் உடல் சார்ந்தும் அவ்வுடல் பாலுறவு, மகப்பேறு என்று இனவிருத்தி சார்ந்தும் அமைந்ததாக காணப்படுகின்றன. அருந்தா இனக்குழு வாழ்க்கையில் ஆண் பூப்படைதல் சடங்கு கொண்டாடப்பட்டதைக் காணலாம். அதுவரை ஆடையின்றி அலைந்த ஆண்மகன் வயதுக்கு வந்துவிட்டான் என்பதை அறிவிக்கவும் கொண்டாடவும் அவன் பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் சடங்கு இது. அக்குழுவின் வயதான முதியவர் இச்சடங்கை நிகழ்த்துவார்.

தன் தலையால் ஆண்மகனின் தலையை மோதி ரத்தம் சிந்த வைப்பார். எறும்பு கடிக்கும் குழிக்குள் அவனை தள்ளி உணவின்றி சில நாட்கள் வைப்பார்கள். வீரமும் வலி பொறுத்தலும் போர் வாழ்க்கையில் ஆணுக்கான அம்சங்களாக இருப்பதால் இச்சடங்கை ஆணின் "மறுபிறப்பு" என்று சொல்கிறார்கள்.

ஆண் பூப்படைதல் சடங்கை "பிணை அறுத்தல்" - க்யா மோட்டு டி செலி (kia motu te sele - to snap the tie) என்றும் பெண் பூப்படைதல் சடங்கை "பாவாடை அணிதல்" ( hakatiti - titi skirt) என்றும் மேற்கத்திய நாடுகளின் இனக்குழு மக்களின் சடங்குகளிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

பல்வேறு நாடுகளில் பூப்பு சடங்குகள்:


பெண் கருத்தரிக்கும் தகுதியை அடைந்துவிட்டாள் என்பதற்கான உடற்கூறு அறிகுறியை பூப்படைதல் என்று சொல்வர். பெண்ணுக்கு முதலாவதாக நேரும் இந்தப் பூப்படைதல் நிகழ்ந்த பிறகே அவளுக்குப் பாலியல் சுகம் உண்டாகிறது என்பதில்லை. தனி நபரின் உடல் வளர்ச்சியைப் பொறுத்து பெண்ணின் பூப்புக்கு முன்போ பின்போ அத்தகைய சுகத்தை அவள் உணரலாம். எனவே பூப்பு எனில் பெண் கருத்தரிக்கும் ஆற்றலைப் பெற்றுவிட்டாள் என்ற அளவில்தான் பொருள் கொள்ள வேண்டும். பெண் பூப்படைதல் சடங்கு பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

ரஷ்யாவில் பெண் பூப்படைந்த உடன் அவள் தாய் பெண்ணின் முகத்தில் ஓங்கி அறைவிடுவாளாம். அவள் அடித்த அடியில் பெண்ணின் கன்னங்கள் சிவந்துவிடுவதை நல்ல அறிகுறியாக நினைக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள்.

நேபாளத்தில் பெண் பூப்படைந்தவுடன் அவளை ஒரு இருட்டறையில் அடைத்து வைக்கிறார்கள். வெளியில் வரவோ சூரிய ஒளியைப் பார்க்கவோ கூடாது. அதன் பின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவள் திருமணத்திற்கு தகுதியுடையவளாகிவிட்டாள் என்பதை உணர்த்தும் வகையில் அவளுக்கும் சூரிய பகவானுக்கும் திருமணம் செய்யும் சடங்கு நடைபெறும்.

ஆப்பிரிக்கா சுலு (Zulu) இனத்தில் பெண் பூப்படைந்த நாளில் ஆடு பலியிடுதல் நடக்கும். அந்தப் பெண் அவள் ஒத்தப் பெண்களுடன் காலையில் எழுந்து நதியில் நீராடி வந்தப் பின் அவள் உடல் எங்கும் சிவந்த களிமண்ணைப் பூசுவார்கள். பூப்படைந்த அந்த நாட்களில் சில உணவுகளை அவள் விலக்க வேண்டும். வயதானவர்களும் அவளைப் போல ஏற்கனவே பூப்படைந்தப் பெண்களும் பூப்படைந்தப் பெண்ணின் உடல் மாற்றங்களையும் வாழ்க்கை முறையையும் சொல்லிக் கொடுப்பார்கள்

ஜப்பானில் பெண்ணின் பெருமைக்குரிய சடங்காக பூப்படைதல் நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். விருந்துக்கு அழைக்கும் போது விருந்துக்கான காரணத்தைச் சொல்வதில்லை. சிவந்த அரிசியும் பீன்ஸ்சும் நிறைந்த பெரிய தட்டை பூப்படைந்தப் பெண்ணின் முன்னால் வைத்திருப்பதன் மூலம் விருந்துக்கும் கொண்டாட்டத்திற்குமான காரணம் சொல்லப்படும்.

இந்தியாவிலும் பெண் பூப்படைதல் சடங்கு எல்லா இன மக்களிடமும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் இச்சடங்கு இன்றும் கொண்டாடப்படுகிறது. "பூப்பு நன்னீராட்டல்" என்று இச்சடங்கை கொண்டாடும் வழக்கம் இன்றும் தமிழர்கள் வாழ்வில் இடம் பெற்றுள்ளது. இச்சடங்கு குறித்த பதிவுகளை தமிழ்த் திரைப்படங்கள் அளவுக்கு யாரும் பதிவு செய்திருக்க முடியாது! தாய்மாமன் உரிமையிலிருந்து பூப்படைந்தவுடன் பாலியல் உணர்வு ஏற்படுவதாக காட்டப்படும் காட்சிகள் வரை உண்மை, பொய் அனைத்தையும் பூப்பு நன்னீராட்டில் கலந்து காட்டிய பெருமை நம் தமிழ்த் திரைப்படங்களுக்கே உண்டு.

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க ...!!!!!



எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க ...!!!!!


மனித மனம் எப்போதும் சந்தோஷமாக இருக்கவும்,நிம்மதியாக வாழவுமே விரும்புகிறது.ஆனால் பலருக்கும் அது சாத்தியமாகவே இருப்பதில்லை.வருத்தம்,நோய்,துன்பம் தரும் நிகழ்வுகள் என்று மகிழ்ச்சியை பறிக்கும் எதிரிகள் இருக்கத்தான் செய்கின்றன.அப்படியானால் எப்போதும் சந்தோஷமாக எப்படி இருக்கமுடியும்? சரிதான்.ஒரு முக்கியமான விஷயம் இவை எல்லாம் தினமும் ஏற்படும் ஒரு விஷயமல்ல!


             நெருங்கிய உறவினரின் இழப்பு யாருக்கும் மகிழ்ச்சியை தராதுதான்.அதையே நினைத்துஏன் பல மாதம்,பல ஆண்டுகள் அந்த பாதிப்பிலேயே இருப்பதுதான் பிரச்சினை.இதுபோலவே மற்ற துன்பங்களுக்கும்,கடந்துவிட்ட கஷ்டங்களுக்கும் பொருந்தும்.நம்முடைய சிக்கல் என்பது ஏற்பட்டுவிட்ட பாதிப்பிலிருந்து எவ்வளவு விரைவில் மீண்டுவருகிறோம் என்பதே!


            மனிதனாக நீங்கள் பிறந்துள்ளதற்கு ஒரு நோக்கம் இருக்கவேண்டும் இல்லையா? உலகம் எதற்காக இருக்கிறது அதை யார் படைத்தார்கள்? மறுபிறவி இருக்கிறதா? இல்லையா? நாம் என்னவாகப்போகிறோம்? இதெல்லாம் விடை இல்லாத கேள்விகள் தான்.ஆனால் நீங்கள் பிறந்துள்ளதன் காரணம் எனக்கு தெரியும்.அது எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு! அதை மற்றவர்களுக்கு பரப்புவதற்கு!


            எப்போதும் அப்படி இருக்க முடிவதில்லை என்பது உண்மைதான்.நூறு சதவீதம் என்பது ஒரு மாயை! அது முழுதும் உண்மையல்ல! அதனால் பெரும்பாலான நேரங்களில் உங்களால் மகிழ்ச்சியுடன் இருக்கமுடியும்.எப்போதும் என்பது அதுதான்.என்னால் முடியவில்லை என்பவர்கள் முதலில் அதைப்பற்றி சிந்திக்க ஆரம்பிக்கவும்.உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாக சந்தோஷத்தை தேர்ந்தெடுக்கவும்.


           மகிழ்ச்சிதான் உங்கள் நோக்கமென்று முடிவு செய்துவிட்டால் அதை பெறுவது எளிது.முதலில் நீங்கள் இப்போது சந்தோஷமாக இருக்கிறீர்களா? என்பதை கவனியுங்கள்.இல்லையென்றால் உங்களை சங்கடப்படுத்தும்,கவலைக்குள்ளாக்கும் விஷயம் எது என்று கண்டுபிடிக்கவும்.இப்போதே நீங்கள் பாதி வெற்றியடைந்த்து போலத்தான்.


           உறுத்தும் விஷயத்தைக் கண்டுபிடித்து விட்டாலே அதை தீர்க்கும் வழிகளும் உங்களுக்கு தோன்ற ஆரம்பிக்கும்.இயற்கை அனைவருக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் சக்தியை கொடுத்திருக்கிறது.தீர்க்க முடியாவிட்டால் உறவினரையோ,நண்பர்களையோ,அதற்கென உள்ள நிபுணர்களையோ அணுக வேண்டும்.பிரச்சினை தீர்ந்தால் மகிழ்ச்சிதானே வரும்.


       முக்கியமான விஷயம் உங்களை சுற்றி உள்ள  மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று நினைத்தால் மட்டுமே நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கமுடியும்.நமது பக்கத்தில் நான்குபேர் அழுது கொண்டிருந்தால் உங்கள் மனநிலையும் பாதிக்கவே செய்யும்.அல்லது மற்றவர்கள் கஷ்ட்த்தில் இருக்கும்போது நீங்கள் சிரித்துக் கொண்டிருந்தால் உங்களுக்கு சிகிச்சை தேவை.


           பிரபல பதிவர் ஒருவர் குறிப்பிட்ட சிலரின் பதிவு ஹிட்டாகிவிட்டால் அன்று முழுக்க சாப்பாடு,தூக்கம் எதுவும் இல்லையாம்.இந்த மாதிரி விஷயங்களால் உங்கள் சந்தோஷம் பாதிக்கப்படுவது கஷ்டம்.மகிழ்ச்சி சட்ட்த்துக்கும்,நெறிகளுக்கும் உட்பட்ட பொருள்களில் இருக்கவேண்டும்.நிகழ்காலத்தில் வாழ்வது,தவறுகளை திருத்திக்கொள்வது போன்றவை முக்கியம்.குழந்தையாக இருங்கள் .வாழ்வு எளிதாகும்.

உயிரை உறிஞ்சுகிறதா சினிமா?


என்னிடம் இரண்டு நாய்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒரு நாய்க்குப் பேராசை, சுயநலம், சந்தேகம், பொறாமை பழிவாங்குவது, மற்றவர்களை அச்சுறுத்துவது போன்ற தீக்குணங்கள் அதிகம். அதற்கு நான் 'ஈவில்' என்று பெயர் வைத்திருந்தேன்.

இன்னொன்று அதற்கு நேர் எதிர். நன்றி , பொறுமை, நட்பு, உதவி செய்யும் மனப்பான்மை இதெல்லாம் அதனிடம் மிகுதி. நான் அதை 'குட்டி' (goodie) என்று அழைப்பேன். இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல. ஒன்றை ஒன்று ஜெயிக்கப்பார்க்கும். எப்போதும் போட்டி போட்டுக் கொண்டே இருக்கும்.

இரண்டில் "எது ஜெயிக்கும்?"
"நான் எது ஜெயிக்க வேண்டும் என்று விரும்புகிறேனோ அது ஜெயிக்கும்"
"எப்படி? உங்களுக்கு புரியவில்லையா?
"எதை ஊக்குவிக்கிறேனோ, எதற்கு ஊட்டம் அளித்து வளர்க்கிறேனோ, எதைப் பலப்படுத்துகிறேனோ, அதைப் பொறுத்து அந்த இரண்டு நாய்களில் ஒன்று ஜெயிக்கும்"

நாய்கள் என்று நான் சொல்ல வருவது நம்முடைய மனநிலையைத்தான்....

சரி, நம்முடைய கல்வி முறை, சமகால இலக்கியங்கள், சினிமா இவை எல்லாம் 'குட்டி[Goodie]'க்குத் தீனி போடுகின்றனவா? அல்லது ஈவிலுக்கா[Evil]?

யோசனை மனதைப் பிறாண்டத் துவங்கியது. செய்தித்தாள் படிக்கும் போது மற்ற சிந்தனை கூடாது என்று மனதிடம் சொல்லி வைத்திருக்கிறேன். ஆனால் சிந்தனை என்பது காபி குடிப்பது, குளிப்பது போல ஒரு பழக்கத்தின் காரணமாக நேர்கிற செயலா?
காற்றுப் போல அது நினைத்த நேரத்திற்கு வந்து வருடிக் கொடுக்கும் அல்லது குப்பை சேர்க்கும்.

"சீ! சும்மாயிரு!" என்று ஒரு அதட்டல் போட்டுவிட்டு அடுத்த பக்கத்தைப் புரட்டினேன்.அங்கே என் கண்ணில் பட்டது இந்த செய்தி.

"உயிரை உறிஞ்சுகிறதா சினிமா?"

என்று ஒரு பெரிய கேள்விக் குறியை வீசித் துவங்கியது செய்தி.

ஐ.நா.சபையின் அமைப்பான உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஒர் ஆய்வு, இந்தியாவில் தயாராகும் படங்களில் முக்கால்வாசிப் படங்கள்- துல்லியமாகச் சொல்வதானால் 76 விழுக்காடு- புகைபிடிக்கும் காட்சிகளைக் கொண்டிருக்கின்றன என்று சொல்கிறது. அதிலும் புகழ் பெற்ற, மக்களிடம் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நடிக நடிகையர்கள், உதாரணமாக அமிதாப் பச்சன், ஷாரூக்க்கான், ரஜனிகாந்த் அந்தக் காட்சிகளில் நடிப்பதாகவும் அது கவலைப்படுகிறது. ஒரு நாளைக்கு இந்தியாவில் ஒன்றரைக் கோடி பேர் சினிமாப் பார்க்கிறார்கள், ஆண்டொன்றுக்கு 900 திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன என்று கணக்குச் சொல்லி, சினிமா இந்த அளவிற்குப் பிரபலமாக இருப்பதால் புகை பிடிக்கும் பழக்கமும் வலுவாக வேரூன்றியிருக்கிறது என்று அந்த ஆய்வு ஆதங்கப்படுகிறது.

ஆனால் இவற்றையெல்லாம் விடக் கவலைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தியாவில் புகையிலைப் பழக்கம் உள்ள 28 கோடிப் பேரில் 50 லட்சம் பேர் குழந்தைகள்! நாளுக்கு நாள் பதின்ம வயதினர் புகை பிடிப்பது அதிகரித்து வருகிறது, அதற்கு சினிமாக்கள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அது கருதுகிறது.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, கறுப்பு -வெள்ளைக் காலத்தில், ஒரு பாத்திரத்தை வில்லனாகக் காட்ட சிகரெட் பயன்பட்டது. கழுத்தில் கர்சீப், கட்டம் போட்ட சட்டை, கலைந்த தலை, வாயில் புகையும் சிகரெட் இவை இருந்தால், அவர் வில்லன் என்று பார்த்தவுடனேயே ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள். இதன் காரணமாக நிஜ வாழக்கையில் புகை பிடித்த சில நல்லவர்கள் கூட, அதை பகிரங்கமாகச் செய்யத் தயங்கினார்கள். உதாரணம்: காமராஜர். அவருக்குப் புகை பிடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் அவர் புகை பிடிப்பது போல் புகைப்படம்  எடுக்கக்கூட அனுமதிக்க மாட்டார்கள்.

எம்.ஜி.ஆர். தனது எந்தத் திரைப்படத்திலும் புகை பிடித்ததில்லை. இமேஜை  பற்றிய கவனம் மட்டுமல்ல இதற்குக் காரணம். அவர் தனது பாத்திரங்கள் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறித்தும் அறிந்து வைத்திருந்தார் என்று கருத இடம் இருக்கிறது.

"தைரியமாக  சொல் நீ மனிதன்தானா?
இல்லை நீதான் ஒரு மிருகம், அந்த மதுவில் விழும் நேரம்"

என்று அவர் திரையில் பாடியதைக் கேட்டுத் தற்காலிகமாகக் குடிப்பதை நிறுத்தியவர்கள் உண்டு.

இன்றைய தமிழ் சினிமாவிற்கு, மதுவிற்கு எதிராகவோ, புகைக்கு எதிராகவோ பேசும் தைரியம் கிடையாது. மாறாக அது இன்று புலம்பல் களஞ்சியம்.

 திட்றாங்க, திட்றாங்க, திட்றாங்க, திட்றாங்க,
தம் அடிச்சா திட்றாங்க, தண்ணியடிச்சா திட்றாங்க,
சைட் அடிச்சா திட்றாங்க, ரைட் கொடுத்தா திட்றாங்க,
திட்றாங்க திட்றாங்க, திட்றாங்க, திட்றாங்க,
 டாடியும் மம்மியும் திட்றாங்க'

தீராத தம்மு வேணும்
திட்டாத அப்பு[அப்பா] வேணும்
குறையாத குவாட்டர் வேணும்
கொண்டாட நட்பு வேணும்...


என்று அது அழுது  புலம்புகிறது.பின் இதையெல்லாம் செய்தால் அப்பாவும் அம்மாவும் பூரித்து புளாகாங்கிதம் அடைந்து, உச்சி மோந்து, திருஷ்டி சுத்தி, ஈன்ற பொழுதின் பெரிதுவப்பார்களா?

சரி, மதுவிற்கு எதிராகப் பிரசாரம் செய்த எம்.ஜி.ஆர், ஏன் புகை பிடிப்பதற்கு எதிராகத் திரைப்படத்தில் எந்த பிரசாரமும் செய்யவில்லை? சரித்திரத்தில் விடை காணமுடியாத மில்லியன் டாலர் கேள்விகளில் இதுவும் ஒன்று. அவர் அதைப் பெரிய விஷயமாகக் கருதாமல் இருந்திருக்கலாம். அல்லது அந்தப் பிரசாரம் பலன் தராமல் போய் அது தனது செல்வாக்கிற்கு ஏற்பட்ட வீழ்ச்சியாகக் கருதப்பட்டுவிடும், எதற்கு ரிஸ்க் என்று எண்ணியிருக்கலாம்.

ஆனால் தனது விளம்பர வருமானத்தைப் பெரிதாகக் கருதாமல், சிகரெட் விளம்பரங்களை வெளியிடப்போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்தது ஆனந்த விகடன். அது புகைப்பதற்கு எதிராகக் கொஞ்சநாள் போராட்டமும் நடத்திப் பார்த்தது. ஆனால் பத்திரிகையாளர்களால்- விகடனில் பணியாற்றிய சில பத்திரிகையாளர்களையும் சேர்த்துத்தான் - கை விட முடியாத ஒரு வழக்கமாக இருந்தது புகை பிடிக்கும் பழக்கம்.

நான் குமுதம் ஆசிரியராகப் பணியாற்றியபோது, சென்னைக்கு வந்த அன்னை தெரசாவைப் பேட்டி கண்டு வருமாறு ஒரு நிருபரை அனுப்பியிருந்தேன். அந்த நிருபருக்குப் புகை பிடிக்கும் பழக்கமுண்டு.தெரசா பேட்டிக்கு வரச் சொல்லியிருந்த நேரத்திற்குச் சற்று முன்னதாகவே சென்று விட்ட அவர், காத்திருக்கும் போது போரடித்ததால், புகைபிடிக்க ஆரம்பித்தார்.மூடப்பட்ட ஒரு அறைக்கு முன்னால் வராந்தாவில் அவர்
நின்று புகைத்துக் கொண்டிருந்தார். தெரசா அந்த அறைக்குள்தான் இருக்கிறார், வேறு யாருடனோ பேசிக் கொண்டிருகிறார், நம்முடைய நேரம் வரும் போது நம்மை அழைப்பார்கள், அதற்கு முன்னதாக சிகரெட்டைக் கீழே போட்டுவிட்டு கொஞ்சம் பாக்கை மென்றுவிட்டு உள்ளே போய் விடலாம் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்தது போல் தெரசா அறைக்குள் இல்லை. பேட்டிக்கு சில நிமிடங்கள் முன் தெரசா விறுவிறுவென்று அந்த அறையை நோக்கி வரத் துவங்கினார். வரும் போது அறைவாசலில் புகை பிடித்துக் கொண்டு நின்றிருந்த நிருபரையும் பார்த்து விட்டார்.

நிருபர் உள்ளே அழைக்கப்பட்டார்.அவர் தெரசாவிடம் கேள்விகள் கேட்கும் முன், தெரசா அவரிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்." புகை பிடிப்பீர்களா?' என்பது முதல் கேள்வி. கையும் புகையுமாகப் பிடிபட்டபின் இல்லை என்றா சொல்ல முடியும். சரி, புகை பிடிப்பதைப் பற்றி ஏதாவது அறிவுரை சொல்லுவார், அதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடலாம் என்று எண்ணிக் கொண்ட நிருபர், " ஆமாம். பத்துப்பதினைந்து வருடமாகப் புகைக்கிறேன். பழகிப் போய் விட்டது" என்றார்.

தெரசா புகையின் தீமைகள் பற்றி உபதேசம் ஏதும் செய்யவில்லை. மாறாக, "ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் புகைப்பீர்கள்?" என்றார்.
"பத்து அல்லது பனிரெண்டு" என்றார் நிருபர்.
"அதற்கு என்ன செலவாகும்?"
"பத்து பதினைந்து ரூபாய் ஆகும்."
"நீங்கள் புகை பிடிப்பதை நிறுத்திவிட்டு மிச்சமாகும் அந்தத் தொகையை எனக்கு நன்கொடையாகத் தருவீர்களா?" என்றார் தெரசா
நிருபர் இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
"அது ஒன்றும் பெரிய தொகையாக இராது மதர்." என்று நழுவப் பார்த்தார் நிருபர்.
"மாதம் முன்னூறு, நானூறு ரூபாய். அதை வைத்துக் கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு மாதம் முழுக்க இரண்டு வேளை பசியாற்றலாம் தெரியுமா?" என்றார். நிருபர் சங்கடத்தில் நெளிய ஆரம்பித்தார்.


" நான் என்னுடைய பணியைத் துவக்கியபோது என் கையில் இருந்த பணம் வெறும் பத்து ரூபாய். அது ஒரு குஷ்டரோகியை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல உதவியது.அங்கு அவரது ரணங்களைக் கழுவி மருந்திட்டு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார்கள். அது அவரது வாழ்வில் மிகப்பெரிய ஒரு திருப்பம். எல்லோராலும் அருவருப்பாக உணரப்பட்டுக் கவனிப்பாரின்றி தெருவோரமாகக் கிடந்த நம்மையும் கவனிக்க மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டு, அவருக்கு மனிதர்கள் மீது நம்பிக்கை பிறந்தது. அதற்குத் தேவைப்பட்டது வெறும் பத்து ரூபாய்.

சேவை செய்ய அதிகப் பணம் தேவையில்லை. ஆனால் சேவை செய்பவர்களுக்கு ஒவ்வொரு பைசாவும் பெரிய உதவி" என்று சொல்லிய தெரசா, நிருபரிடம், இனிப் புகை பிடிப்பதில்லை, அதற்கு செலவிட்டு வந்த பணத்தை தர்மத்திற்குக் கொடுக்கிறேன் என்று உறுதி வாங்கிக் கொண்டுதான் பேட்டிக்கு சம்மதித்தார்.

தமிழ் சினிமாக்கள் மதர் தெரசா இல்லை.புகை பிடிப்பவர்கள் மனதில் தர்ம சிந்தனையை விதைக்க அவை முன் வரும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் வியாபாரத்தில் செலுத்தும் கவனத்தில் பத்தில் ஒரு பங்கை சமூக நலன்களைப் பேணுவதில் காட்டக் கூடாதா?

திருட்டு விசிடியை எதிர்த்து ஊர்வலம் போகப் போவதாக, முதல்வரை சந்தித்து மனுக் கொடுக்கப் போவதாக தமிழ் சினிமா நட்சத்திரங்கள் அவ்வப்போது சொல்வதுண்டு. வியாபாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள இந்த முயற்சி.

சரி, திருட்டு வி.சி.டி.கள் எங்கிருந்து முளைக்கின்றன? அவை விதை போட்டு விளைவதில்லை. வானத்திலிருந்து குதிப்பதில்லை.சினிமா உலகத்தில் இருந்து சினிமா உலகத்தைச் சேர்ந்தவர்களால்தான் உருவாகின்றன. அதற்கு ஏன் வீதியில் இறங்கி ஊர்வலம் போகவேண்டும்? அறைக்குள் உட்கார்ந்து அலசி ஆராய்ந்து முடிவுக்கு வர வேண்டிய விஷயமல்லவா இது? தங்களது பேராசைக்குக் கடிவாளம் போட வேண்டிய விஷயத்திற்கு, ஊராரை ஏன் உசுப்பி விட வேண்டும்?

இந்த விசிடி விஷயத்தில் காட்டுகிற அக்கறையில். பத்தில் ஒரு பங்கை

•இனி  தமிழ்த் திரைப்படங்களில் புகைப் ப்டிக்கும் காட்சிகளைக் காண்பிப்பதில்லை,

•பெண்களைக் கேலி செய்யும் பாடல்களை அனுமதிப்பதில்லை,

•இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவதில்லை,


•ஜாதிப் பெயர் வருவது போலத் தலைப்பு வைப்பதில்லை
என்ற விஷயங்களில் முடிவு எடுப்பதில் காட்டலாமே? இந்த விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஊர்வலம் போகலாமே? கோஷங்கள் எழுப்பலாமே?

'குட்டி'யைத் தூக்கி வைத்துக் கொஞ்சாவிட்டாலும் பரவாயில்லை, ஈவிலுக்குப் போடுகிற ரொட்டியைக் குறைத்துக் கொள்ளலாமே? செய்யுமா திரை உலகம்? அல்லது திரைக்கு வெளியிலும் வேஷம் போடுமா?

நம்பிக்கை....?


நம்பிக்கை

'என் பையன் மிகவும் நல்லவன்' என்று நீ நம்பிவிட்டால், எந்தவித தொல்லையும் உனக்கு இருக்காது.


பையன் கெட்டவனாக இருக்கலாம்; அதன் விளைவுகளை  அனுபவிக்க வேண்டியவன் அவனே.


மனைவி உத்தமி, பத்தினி என்று நம்பி விட்டால், உன்னை பொறுத்தவரை காதல் சுகமாகி விடும்.


தவறான நடத்தைக்குத் தண்டனை அனுபவிக்க வேண்டியவள் அவளே.


வேலைக்காரனையும் நம்பி விட வேண்டும்; அதற்கு அவன் துரோகம் செய்தால் அவனை விலக்கிவிடு; அதற்காக யாரைக் கண்டாலும் அவ நம்பிக்கை கொள்ளாதே.


நம்பிக்கையோடு கோவிலுக்குப் போ.


'நம்பினார் கெடுவதில்லை' என்பது நான்கு மறை தீர்ப்பு.


வாஸ்கோடகாமாவின் நம்பிக்கை, புதிய நிலத்தைக் கண்டுபிடித்தது.


கொலம்பஸ்ஸின் நம்பிக்கை, அவன் தாய் நாட்டுக்கு ஒரு புதிய நிலத்தை தந்தது.


ஆயுதங்களில்லாத சர்ச்சிலின் நம்பிக்கை, இரண்டாவது  உலகப் போரின் போது இங்கிலாந்துக்கு வெற்றியை தேடி தந்தது.


கடலில் விழுந்து தத்தளித்து ஒருவன் இரண்டு மாதங்கள் நீந்திக் கொண்டிருந்தான் என்றும், பிறகொரு கப்பலில் கரை சேர்ந்தான் என்றும் நான் படித்திருக்கிறேன்.


நம்பிக்கை மட்டும் இல்லாதிருந்தால் அவன் பிணமாகி மீன்களுக்கு இரையாகி இருப்பான்.


பிரகலாதனின் நம்பிக்கை, கடவுளைக் காட்டிற்று.


கண்ணனின் நம்பிக்கை பாரத போரில் வெற்றிப் பெற்றது.


நான் முன்னேறியது  படிப்பினால் அல்ல; நம்பிக்கையால்.


அப்போது எனக்கு பதினான்கு வயது. கவிதை எழுதுவதில் எனக்குக் கொள்ளை ஆசை.


ஒரு நாள் அதிகாலையில் எழுந்து நான்கு வரி எழுதினேன்;


வீணா கானம் விடியுமுன் கேட்டது;
கானாமிர்தம் காதுக்கினிமை !
தூக்கம் கலைந்தது துள்ளி எழுந்தேன்!
படுக்கையிலிருந்தே பருகினேன் அமுதம்!


--- இந்த நான்கு வரிக்கு மேல் எழுத தெரியவில்லை. விட்டுவிட்டேன்.


பதினேழாவது வயதில் முதன் முதலாக முழுக் கவிதை எழுதினேன். அந்த வயதிலேயே ஒரு பத்திரிக்கையில் ஆசிரியரானேன்.


ஒரு நண்பர் எத்தனை ஆயிரம் ரூபாய் இருந்தாலும் என்னிடம் கொடுத்து வைப்பார்-- நம்பிக்கை.


நம்பிக்கைக்குத் துரோகம் செய்கிறவன் பெரும் தண்டனைக்கு ஆளாவான்--காண்ணாரக் கண்டிருக்கிறேன்.


என்னிடம் அநியாயமாகப் பணம் வாங்கியவர்கள், அந்த பணத்தை நியாயமாக செலவழித்தது இல்லை;  அது துரோகத்துக்கு தண்டனை.


தேசத்தை நம்பு; தெய்வத்தை நம்பு; உலகம் உன்னை புகழும்.


'இது நம்மால்  முடியும்' என்று எண்ணு; முடிந்துவிடும்.


மனோதிடமும், வைராக்கியமும் இந்த நம்பிக்கையின் குழந்தைகளே!


ஒரு துறையில் முனைந்து நின்று நம்பிக்கையோடு முன்னேறினால், நீ நினைக்கும் அளவுக்குப் புகழும், பொருளும் வந்து சேரும்.


கடலைக்  கடக்க கப்பலை தந்தது எவனோ ஒருவனின் நம்பிக்கை.


இவற்றுள் தலையாயது  தெய்வ நம்பிக்கை.


தெய்வ நம்பிக்கை பொருள் தருகிறது; நிம்மதி தருகிறது; நியாயமாக நடக்க செய்கிறது.


மருத்துவரிடம் நம்பிக்கை வைத்தால் மருந்தில்லாமலேயே பாதி நோய் தீர்ந்து விடுகிறது.


நம்பிக்கை உடையவன் தான் வேதந்தியானான், விஞ்ஞானியானான்.


நம்பிக்கை இல்லாதவனுக்கு சுகமும் அற்பம்; ஆயுளும் அற்பம்.


தண்ணீரைப் பால் என்று நம்பினால் அது பால் தான்; வேப்பிலை இனிக்கும் என்று நம்பினால் இனிக்கும்.


நம்பிக்கைக்கு மிகவும் தேவையானது மனம்.


அது உன்னிடமே இருக்கிறது; அதற்காக நீ ஒரு பைசாவும் செலவழிக்க தேவை இல்லை.

-கவியரசு கண்ணதாசன்

Monday, 6 January 2014

மருந்து வியாபாரமா? மரண வியாபாரமா?



போலி மருந்துகளும், காலாவதியான மருந்துகளும், தமிழகத்தில் முழு வீச்சில் பல வருடங்களாக விற்பனை செய்யப்பட்ட கொடுமையான உண்மை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு, நாட்டையே உலுக்கி உள்ளது. சில உயிர்கள் பலியான பிறகே இந்தக் கொடூர மோசடி வெளிவந்துள்ளது. சென்னை கொடுங்கையூரில் காலாவதியான மருந்துகளை அழிக்கும் கிடங்கு உள்ளது. கொடுங்கையூருக்குக் கொண்டு வரப்படும் காலாவதியான மருந்துகளை சில கொடுங்கையர்கள் வழியிலேயே மடக்கி, அவற்றை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்று, காலாவதியான தேதிகளை மாற்றி, புதிய தேதிகளை அச்சடித்து மறுபடியும் விற்பனைக்கு அனுப்பி வந்துள்ளனர்.


இப்படி காலாவதியான மருந்துகளை சாப்பிட்டு, இவரை எத்தனை பேர் காலாவதியாகினார்கள் என்பது கணக்கில் இல்லை. இதுவல்லாமல், போலி மருந்துகளும், நூற்றுக்கணக்கான வகைகளில் புழக்கத்தில் விடப்பட்டு பொதுமக்களின் உயிரோடு திருவிளையாடல் நடத்தப்பட்டுள்ளது. 600 வகையான போலி மருந்துகள் மாநில முழுவதுமுள்ள மருந்து கடைகளுக்கு விநியோகிக்கப்பட்டு கனஜோராக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.


மருந்து வியாபாரமா? மரண வியாபாரமா?மக்களின் உயிர் அவ்வளவு மட்டமா? அல்லது மாநிலத்தில் இருப்பது கையாலாகாத சட்டமா? ஒன்றும் புரியவில்லை. காலாவதி மருந்துகளை தேதி மாற்றி விற்று, கோடிகோடியாய் குவித்த கும்பலைச் சேர்ந்த பிரதீப் சோர்டியா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலாவதி+போலி மருந்து கும்பலின் மூளை என கருதப்படும் மீனா ஹெல்த்கேர் மீனாட்சிசுந்தரம், சஞ்சீவ்குமார், உட்பட 5 பேரை போலீஸ் பிடிக்கவில்லை.


அவர்களே நீதிமன்றத்தில் (பாதுகாப்பாக) சரண் அடைந்துள்ளனர். மீனாட்சி சுந்தரம் மருந்துகளின் பெயரால் மரண வியாபாரம் செய்து 100 கோடிக்கு மேல் குவித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்படி என்றால் எவ்வளவு காலம் இந்தக் கொடுமை அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை சிந்தித்துப் பாருங்கள். காலாவதி+போலிமருந்து வழக்கு, சிபிசிஐடி குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் திகிலூட்டும் செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன.


வசந்தா பார்மா, மீனா ஹெல்த் கேர் நிறுவனங்களின் பெயரில் காலாவதி மருந்து மாத்திரை விற்றதில் கோடிக்கணக்கில் லாபம் கிடைத்ததால் அவற்றை பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளாய் மாற்றி மீனாட்சி சுந்தரம் தம்பதியர் அதன் இயக்குநர்களாக இருந்ததும் விசாரணையில் வெளிவந்துள்ளது.


தமிழகம் முழுவதும் 42 ஆயிரம் கடைகளுக்கு மேல், காலாவதி+போலி மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. நீங்கள் வழக்கமாய் மருந்து மாத்திரைகள் வாங்கும் கடையும் இதில் இருக்கலாம். மாநிலமெங்கும் மூட்டை மூட்டையாக காலாவதி+போலி மருந்துகள் கொட்டப்படுவதும், கண்டுபிடிக்கப்படுவதும் பத்திரிக்கைகளில் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. ஆந்திராவைச் சேர்ந்த ராமு என்பவர் டெல்லியில் உள்ள ஒரு கம்பெனியிலிருந்து போலி+காலாவதி மருந்துகளை வாங்கி மீனாட்சி சுந்தரத்துக்கு விற்பனை செய்ததும் அதை மீனாட்சி சுந்தரமும் பல கேடிகளும் சேர்ந்து கோடிகளாய் மாற்றிய கொடுமையும் நடந்துள்ளது.


பல மாநிலத்திலும் இந்த பாதக வலை விரிந்துள்ளது.  கல்வியறிவற்றவர்களும், வறுமைகோட்டிற்குக்கீழ் வாழ்கின்ற ஏழை எளியவர்களும் பெரும்பான்மையாக வாழ்கின்ற நம் நாட்டில் மருத்துவம் வணிகமாகவும், மருத்துவமனைகள் கொள்ளைக் கூடங்களாகவும் மருந்து கடைகள் மரண வியாபார கேந்திரங்களாகவும் மாறி இருப்பதற்கு யார் காரணம்? மக்களிடம் வாக்குகளை வாங்கிக் கொண்டு மக்களின் மீது அக்கறையே இல்லாமல் இருக்கின்ற ஆட்சியாளர்கள் அல்லவா?


கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்றால், உயிருக்கு உத்தரவாதமில்லை என்று அஞ்சுகிற மக்கள், தனியார் மருத்துவர்களிடம் செல்கின்றனர். கிளினிக்குகள் என்ற பெயரில் இயங்கும் இவை, ‘கிளின்’ செய்வது நோயை அல்ல, நோயாளியின் மணிப்பர்சை. மருத்துவர்களுக்கும், ஆய்வகங்களுக்கும் இ.சி.ஜி. ஸ்கேன் நிறுவனங்களுக்கும், மருந்துக் கடைகளுக்கும் இடையே ஓர் அயோக்கிய முற்போக்குக் கூட்டணி உள்ளது. கையில் பிளேடு அறுத்துவிட்டது.


 மருந்து போட்டு விடுங்கள் என்று போனால், எக்ஸ்ரே, இ.சி.ஜி, ஸ்கேன், ரத்தசோதனை, சிறுநீர் சோதனை, மலம், சளி சோதனை, சோதனை மேல் சோதனை செய்து, பிறகு 4 பக்கங்களுக்கு 40 வகையான மருந்துகளை புரியாத கையெழுத்தில் எழுதித் தருவார், மருத்துவர். எனவே, பணத்தையும், உயிரையும் பாதுகாக்க விரும்பும் ஏழை மக்கள், நேராக மருந்து கடைகளுக்கே சென்று நோயை சொல்லி மருந்துகளை வாங்குவது பரவலாக நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு, முடித்து பாதி டாக்டர் வேலை செய்யும் நபர்கள் இருக்கும் மருந்துக் கடைகளில் கூட்டம் அலைமோதுவதுண்டு.


இப்போது, மருந்துக்கடைகளில் விற்கும் மருந்துகளும் போலியானவை, காலாவதியானவை என்றால், எவ்வளவு கொடுமை. காலாவதி மருந்துகளை விற்ற காலிகள் மீது அரசு எடுத்துள்ள காலங்கடந்த நடவடிக்கை இன்னும் கடுமையாக இருக்க வேண்டும்.


பரபரப்பாக பத்திரிகைகளில் வரும் செய்திகள் பத்து நாளைக்குப் பிறகு பழைய செய்தியாகி, பிறகு மறதியை பிறவிக்குணமாய் கொண்ட மக்கள் மனதிலிருந்து மறைந்து விடுவதுண்டு, கொடிய குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து விடுதலையாவதும் உண்டு. போதை மருந்து வைத்திருந்தாலே இஸ்லாமிய நாடுகளில் மரணதண்டனை கண்டிப்பாக நிறைவேற்றப்பட்டுவிடும். போலி மருந்தை விற்பவர்களுக்கும் இங்கே போதிய பாதுகாப்புண்டு.


இதுமிகவும் அவலமானது, கேவலமானது. மக்களின் உயிரோடு விளையாடும் கொடியவர்கள், தூக்கு மரத்தில் ஏற்றப்படாவிட்டால், சட்டமும், நீதியும், கழுமரத்தில் ஏறிவிடும் என்பதை அரசாங்கம் கவனிக்க வேண்டும்.

அழிவுப் பாதையின் உச்சக்கட்டத்தில்!!!



(இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)


மக்களின் பொழுதுபோக்குக்காக ஏற்படுத்தப்பட்ட சாதனங்களில் முதன்மையானதாக தொ(ல்)லைக்காட்சி விளங்குகிறது என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை. ஆனால் அதன் மூலம் செய்திகள் உள்ளிட்ட உலக - அறிவியல் – அரசியல் விஷயங்களும் அறிந்து கொள்ளலாம் என்றும், மக்கள் மனங்களை பண்படுத்தும் இது என்று வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். அந்த அடிப்படையில்தான் தண்டனைக்காக அனுப்பப்பட்டு சிறையில் இருக்கும்போது கைதிகள் கூட T.V. பார்க்கலாம் என்று கருத்து கூறப்பட்டு அது ஆட்சியாளர்களால் அனுமதிக்கப்பட்டும் வருகிறது.

ஆனால் இன்று நடைமுறையில் இந்த தொலைக்காட்சி சேனல்களில் மக்கள் எந்த நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கிறார்கள்? எந்த சேனல்கள் பெரும்பாலும் ரசித்து மகிழ்கிறார்கள் என்று பார்த்தால், அறிவியல் - அரசியல் கூடிய செய்திகளை விடவும் நாடகங்கள் எனப்படும் மெகா சீரியல்களும் - திரைப்படங்களும் – ஆடல் பாடல் – கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் தான் முன்னணி வகிக்கின்றன. யுக முடிவுக் காலம் வருவதை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் உலகம் அதை எந்தளவுக்கு வரவேற்றுக் கொண்டிருக்கிறது என்று யாரும் பெரிய ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டியதில்லை.

ஆம்! இந்த தொலைக்காட்சிகளின் ஜீவ நாடி திரைப்பட உலகம் இதன்மூலம் உருவாக்கப்படும் படங்கள் – நடிகர்கள் – நடிகைகளின் வாழ்க்கை மக்களை எந்தளவுக்கு அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்றுக் கொண்டிருக்கிறது? தினமும் செய்தித்தாள்களை புரட்டினால் காதல் ஜோடி தற்கொலை, கள்ளக்காதலர்களின் காமக் களியாட்டங்கள் – வயது வரம்பு தாண்டி காம வெறிக்கு பலியாகும் மாணவர் – இளைஞர்கள்; பணம் செலவுக்கில்லையென்றால் கொலை – கொள்ளை இதுவெல்லாம் யார் கற்றுத் தந்த பாடம்? சினிமா தவிர வேறு யார் இதை இவ்வளவு (கேவலமாக) - வேகமாக கற்றுத் தரமுடியும். காசிற்காக சினிமாவில் நடிக்கும் இவர்கள் நிஜமாக வாழ்பவர்களுக்கு எதைக் கற்றுத் தரமுடியும்? இதைத்தான் நிஜத்தில் மூட்டை தூக்குபவர்களுக்கு கூலி பத்து ரூபாய் என்றால் மூட்டை தூக்குபவதைப் போல் நடிப்பவர்களுக்கு கூலி கோடி ரூபாய். இவர்களை இனம் காட்ட இவர்களின் வாழ்க்கை - குடும்பத்தைப் பாருங்கள். விரல்விட்டு எண்ணிப் பாருங்கள். எத்தனை நடிகர் – நடிகை கைப்பிடித்த ஒரே கணவன் – மனைவியாக வாழ்ந்திருக்கிறார்கள். எத்தனை நடிகர் – நடிகைகள் லஞ்ச லாவண்யம் பற்றி பேசுபவர்கள் – அதைத் தவறு என்று கூப்பாடு போடுவார்கள் - வெறுமனே தாங்கள் நடிப்பதற்காக லட்சக்கணக்கில் – கோடிக்கணக்கில் பணம் வாங்குகிறார்களே? அதில் எத்தனை பேர் சரியாக வரிகட்டுகிறார்கள். ஊருக்கு உபதேசம் செய்யும் உத்தமர்கள்(?) கறுப்பு பணம் வாங்காமல் – மது அருந்தாமல் – விபச்சாரம் செய்யாமல் இருப்பவர்கள் யார்? யார்? என்று யாராவது காட்டினால் தெரிந்து கொள்ளலாம். ஆக அழிவுப் பாதையின் திறவுகோலாக அவதரித்துள்ள ஒவ்வொரு மொழியின் – நாட்டின் திரையுலகில் இப்படித்தான் என்பதை யாராவது மறுப்பவர்கள் உண்டா?

திரையுலகம் இப்படி என்றால் சின்னத்திரையுலகம் அழிவுப் பாதையில் ஊன்றுகோளாக உருவெடுத்து விட்டது. ஆபாசங்களை அருவெறுப்பாக கருதாமல் அதை அரங்கேற்றுவதில் ஒவ்வொரு சேனல்களும் நீயா – நானா? என்று போட்டியில் உள்ளன. எத்தனைப் போர்க்குரல்கள் எழுப்பப்பட்டாலும் அதனைக் கண்டு அஞ்சும் மனநிலையில் எந்த T.V. சேனலும் இல்லை. இதனைக் கட்டுப்படுத்தவேண்டிய அரசாங்கம் தமிழில் பேர் வை; உனக்கு வரிச்சலுகை என்கிறது. ஒரே ஒரு பாடல் காட்சிக்கும் – ஒரே ஒரு சணடை காட்சிக்கும் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வரி வெறும் ஊறுகாய் மாதிரிதான். எல்லா மொழிக்காரர்களும் ஒருவேளை அரசாணை கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் அந்தந்த மொழி வெறி அவரவர்களுக்கு.

அரை குறை ஆடையுடன் என்ன? அதுவும் இல்லாமல் காட்சி தர நான் ரெடி: படம் பிடிக்க – ஒளிபரப்ப யார் ரெடி? என்று சினிமா விபச்சாரிகள் கேட்கின்றனர். சினிமாத் துறையையும் – சின்னத்திரை எனப்படும் T.V.   சேனல்களையும் தாண்டி மக்களை அழிவின் பக்கம் அடைப்பவர்கள் செய்தித்தாள்கள் மூலம் T.V.   க்கு விளம்பரம்; T.V. யை ஒரு முறை பார்ப்பதைவிட செய்தித்தாளை பத்திரப்படுத்தி எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்வார்களே! அதற்காக பெரும்பாலான நிறுவனங்கள் இரண்டையும் ஒருங்கேப் பெற்றுள்ளன. அதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் – தனித்தனி செய்தியாளர்கள் தேவையில்லை. அப்புறமென்ன தேசிய வார இதழ்- நாளிதழ் – குடும்ப, வார இதழ் என்று A சர்டிபிகேட் இல்லாமல் கவர்ச்சிப் படங்களை சென்சார் செய்யாமல் வெளியிடும் தைரியம் இந்த குடும்ப(?) இதழ்களுக்குச் சாரும். ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வரும் தினப்பத்திரிகைகளை பார்ப்பவர்களுக்குத் தெரியும். கூச்சப்பட வேண்டி நம்மை நெகிழச் செய்யும் படங்கள் – செய்திகள் தான் எத்தனை எத்தனை? யார் கொடுத்தது இந்த குடும்ப - தேசிய சர்டிபிகேட்,

சீர்கெடுக்கும் சேனல்களுக்கு பண மழை பெய்ய வறட்சி ஏதும் இல்லை. பணம் வெள்ளமும் – பணப் புயலும் போங்கள். நல்ல அமோக விளைச்சல். அதை சாகுபடி செய்ய மடையர்களாய் மக்கள். T.V. யில் வியாபாரம் இல்லாத எந்தப் பொருளையும் யாரும் வாங்காத நிலை அளவுக்கு தயிர் சாதத்திலிருந்து ஊறுகாய், பால், பவுடர், ஷேம்பு, சோப்பு, பிளேடு, அரிசி – எண்ணை – மாவு முதலி இரு சக்கர வாகனங்களிலிருந்து 4 சக்கர வாகனங்கள் வரை எந்த விளம்பரத்தை யார்தான் விட்டு வைத்தார்கள்? – சலூன் கடைக்கு மட்டும்தான் விளம்பரம் இல்லை. எல்லாம் T.V.  மயம்; இல்லை இல்லை எல்லாம் T.V.   மாயம்.

இந்த மூன்றைத் தவிர அடுத்ததாய் மக்களை அழிவின்பால் அறைகூவல் விடுவதாக செல்போன்கள் தயாராகிவிட்டன. பாமரர்களையும் விட்டுவைக்காமல் இந்த செல்போன் சூறாவளி செல் நிறுவனங்களால் சலுகை – மலிவு என்ற கோரப்பிடியில் மக்கள் ஆட்படுத்தப்படுத்தப்படுகின்றனர். பள்ளி- கல்லூரி காலங்களில் கைக்கடியாரம் என்றால் எப்படியிருக்கும் என்று தெரியாமலிருந்த மக்களுக்கு விஞ்ஞானம் - கம்பியூட்டருக்குப்பின் தயாரித்தது தான் செல்ஃபோன். எல்லா தரப்பினரையும் பதம்பார்த்து அழிவின் அடித்தளமாக செல்ஃபூன்கள் விளங்குவதை யாரும் மறுக்க இயலாத பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் நீலப்படங்களைக் கூட இதில் பார்க்கும் வசதியும் உண்டு.

பெரிதான் கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டிருந்தால் கண் கெட்டுவிடும் என்று சொன்னார்கள் – அதையும் தாண்டி புனிதமாக சிறிதே – சிறிதான் இந்த செல்போன்களில் இன்டர்நெட் இணைப்புடன் – F.M. T.V. தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். அப்படியென்றால் அதையே உற்றுநோக்கி - இயக்குவதாலும் – படம் பார்ப்பதாலும் கண் என்ன  ஆகும் என்று மெய்ஞானம் தான் பதில் சொல்லவேண்டும்.

ஆச்சரியப்பட வேண்டிய விஞ்ஞான விஷயங்கள் ஆபாச அரங்கேற்றங்களால் கைச்சேதப்பட வைக்கின்றன. எவ்வளவு கஷ்டப்பட்டு முதல் தயாரிப்பை ஒருவன் கண்டுப்பிடித்தவுடனேயே அதைப் போன்ற – அதனைவிட பன்மடங்கு வசதிகளுடன் அடுத்தடுத்தவர்கள் கண்டுபிடித்து விடுகிறார்கள். ஒருவர் எங்கிருந்தாலும் தொடர்பு கொள்ளவே செல்போன்கள் தயாரிக்கப்ட்டன. ஆனால் இன்று அதன் நிலையை அதிகம் விவரிக்க வேண்டியதில்லை.

அடுத்தபடியாக காமக் களியாட்டங்கள் அரங்கேறும் இடங்களாக சுற்றலாத்தளங்கள். பார்க்குகள் – பீச்சுகள் இடம் பெறுகின்றன. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதாரண சுற்றுலாத் தளங்களில் எங்கேயாவது ஒரு காதல் ஜோடியை பார்ப்பது அதிசயம்; அதுவும் ஆள் அரவமற்ற ஒதுக்குப் புறங்களில் பயந்து பயந்து பேசிக் கொள்வதை நாம் கண்டோம். ஆனால் இன்றோ சர்வசாதாரணமாக பஸ்களில் – பஸ் நிறுத்தங்களில் ஆரம்பித்து பார்க் – பீச்சுகளில் மற்றும் பொது இடங்களிலும் கூட காதல் – காம லீலைகள ஒருவர் மடியில் ஒருவர் சாய்ந்து என்று ஆரம்பித்து எழுதக் கூசும் அசிங்கங்கள் நடக்கின்றன. இப்போது நடுநிலையாளர்கள் ஆள் அரவமற்ற இடங்களில் ஒதுங்கிக் கொள்ளும் அவலம் உள்ளது. எனவே இது போன்ற எல்லா அசிங்கங்களுக்கும் மூலகாரணம் சாட்சாத் இந்த சின்னத் திரையும் – திரை உலகமும் தான். இதனைத் தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை. வீடு தேடி வரும் இந்த சேலை இந்த அழிவை எதிர்பார்க்கும் உலகத்திற்குத் தேவையா? என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

எல்லாரும் எல்லாமும் பெற அன்பு மட்டுமே போதாது நல்லறிவும் வேண்டும். நல்லறிவும் நம் வீடு தேடி வரும்; வீடு தேடி என்ன நல்ல உள்ளங்களை தேடி நாடி வரும்; அழிவே வீடு தேடி வரும்போது அறிவு வீடு தேடி வராதா என்ன? எனவே உள்ளங்களை சுத்தமாக்கிட நற்போதனை சார்ந்த அறிவை வரவேற்பதை ஒவ்வொரு தனிப்பட்ட மனிதவும் கடமையாக்கிக் கொள்ள வேண்டும்.

பிறந்த ஐந்து நிமிடத்திலேயே ???

எதிர்கால பள்ளிப்படிப்புகளில் சாதனை படைக்கும் நபர்களை அவர்கள் பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


குழந்தை பிறந்த 5 நிமிடத்தில் அதன் அறிவுத்திறனை கணித்து அதன் சாதனை விவரங்களை அளிக்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.


8 லட்சத்து 77 ஆயிரம் ஸ்வீடன் மாணவர்களின் பள்ளி தேர்வு முடிவுகளை ஒப்பிட்டு இந்த ஆய்வு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.


குழந்தை பிறந்த 1 முதல் 5 நிமிடத்தில் ஆப்கர் என்ற சோதனை செய்யப்படுகிறது. இந்தச் சோதனையில் பிறந்த சிசுவின் இதயத்துடிப்பு, சுவாசம், தோல் நிறம், இருமல் ஆகிய விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது.


இந்தச் சோதனையில் மதிப்பெண்ணுக்கு மேல் பெறும் பிறந்த குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கும் என்றும், அதனால் நல்ல கல்விச் சாதனை படைக்கும் என்றும் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.


இந்த சேதனையை 1952 ஆம் ஆண்டு டொக்டர் விர்ஜினியா ஆப்கர் மற்றும் குழுவினர் உருவாக்கி செயல்படுத்தினர்.


ஸ்வீடன் மருத்துவ நிபுணர் ஆண்ட்ரியா ஸ்டுவர்ட் இந்த ஆய்வு முடிவு குறித்து விளக்கி உள்ளார்.


இந்த ஆய்வு கட்டுரை அடுத்த மாதம் வெளியாகும் குழந்தை மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவம் இதழில் வெளியாகிறது.

வெற்றிக்கான சுருக்கு வழி.





வெற்றிக்கான சுருக்கு வழி.



1.என்னுடைய உறுப்புகள் விலங்குகளின் வழியாகப் படைக்கப்பட்டிருக்கின்றன,மாறாக என்னுடைய எண்ணங்கள் கடவுளின்  படைப்பாற்றல்  வழியாக  .என்னுடைய உறுப்புகளின் வழியாக விலங்குகளின்  குணங்களும் என்னுடைய சிந்தனைகள்  வழியாகக் கடவுளின் படைப்பாற்றலும்.இவை இரண்டின் செயல்களும்  இயற்கையாகவே கடவுளின்  படைப்பாற்றல் வழியில்.உறுப்புக்களின் செயலில்  கடவுளின்  எண்ணத்தைச் செயல் படுத்தும் போது அது கடவுளின் படைப்பாற்றலாகவும் உறுப்புக்களைத் தன்னிச்சையாக விடும் போது  அவை விலங்குப் பண்பையும்  வெளிக்  காட்டுகின்றது.

2.நம்மில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒரு வரலாறு .நாம்  ஒவ்வொருவரும்  வரலாற்றை உருவாக்கும்  நபர்களாக இருப்போம்.நம்முடைய  வாழ்க்கை  ஒரு முடிந்து போன வரலாறாக இல்லாமல்.உலகத்தில் உள்ள எல்லா நற்பண்பாளர்களையும்தனியாக ஒரு தீவில் வைத்து  அங்கு கூட்டம் ஒன்றை நடத்துவோம்,அவர்கள் அங்கு ஒரு குறிப்பிட்ட நாட்கள் தங்கும்படியாகச்  செய்வோம்.அவர்கள் உலக மக்களிடையே உண்மை நிலவ வேண்டும் என்றும் நம்பிக்கை ,அன்பு ,எண்ணத் தூய்மை ஆகியவை நிலவ வேண்டும் என்று பாடுபட்டவர்கள் தங்களது கொள்கைகளில் உறுதியாக இருப்பவர்கள் .ஒரு சூழ்நிலையில் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் 100 பேரில் 5 பேருக்கு மட்டுமே தேவையான உணவு மட்டும் கிடைக்கும் படிச் செய்வோம் .

3.அவர்களிடையே ஒரு பெரிய உணவுப் போராட்டத்தை தோற்றுவிப்போம் என்ன நிகழும் அவர்கள் போதித்த கொள்கைகள் அணைத்தையும் அவர்களே மீறும் படியாக ஆகிவிடும்.அப்படி என்றால் எல்லா நல்லவைகளும் போதனைகளும் ஒழுக்கங்களும் எந்த ஒரு தனி  மனிதனுக்கும்பிறப்பின் வழியாகவோ சிந்தனையின் வழியாகவோ  சொந்தமல்ல.யாரும் இயற்கையாக இப்படிப்பட்ட குணங்களோடு இருப்பதில்லை.அவர்கள்  இது நாள் வரை வெளிப்படுத்தியவைகள் எல்லாம்   அவர்களைச் சுற்றியிருந்த சூழ்நிலைகளில்  இருந்து அவர்களுக்குத் தேவையானதை  கிரகித்து  வெளிப்படுத்தியது  தான்.ஆகவே  நாம்  நமக்கு எப்போதெல்லாம்  எதுவெல்லாம்  வேண்டுமோ அப்போதெல்லாம் நமது  தேவைகள்  கொட்டிக்கிடக்கும் சூழ்நிலைகளின் ஊடே செல்வோம் அல்லது அப்படிப்பட்ட சூழ்நிலைகளைப் படைப்போம்  அவற்றைக் கிரகிப்போம் .

4.சூழ்நிலைகளில் நல்லதும் கெட்டதும் இணைந்தும் பிணைந்தும்   நமது  கிரகிப்பிற்காக
அண்டம் முழுவதும்  கொட்டிக்  கிடக்கின்றது.அதனை  எப்படி கிரகிப்பது  என்பது நமது இயற்கை பற்றிய புரிதல்களைப்  பொறுத்தது .உலகின் அந்த நற்பண்பாளர்கள் அந்தத் தீவிற்கு  வருவதற்கு  முன்பாக தாங்கள் கிரகித்து  இருந்த நற்பண்பாளர்கள் என்னும்   சூழ்நிலையைப் போலவும், பின்பு  உணவுக்காகப் போராடும் போது அவர்களால்  கிரகிக்கப்பட  நற்பண்புகள் என்னும் சூழல் அறவே இல்லாதது போலவும்.ஆகையால் சூழ்நிலைகளைப் பார்ப்போம் நாம் கிரகிக்க என்ன இருக்கின்றது என்று நமது அடையாளத்திற்காக.

5.நமது அன்றாட வாழ்க்கையில் மின்சாரத்தால் இயங்கும் மின்விசிறி  ,மின் மோட்டார் ஆகியவற்றைப் பயன் படுத்துகின்றோம் அதில் மின்சாரத்தைச் செலுத்தினால் மின் சக்தி இயங்கு சக்தியாக மாற்றப்படும் அதே போல் மேலே சொன்ன மின் மோட்டாரை நாம் வேறு ஏதாவது ஒரு சக்தியைக் கொண்டு இயக்கினால் அங்கு  இயங்கு சக்தி மின்சக்தியாக மாற்றப்படும் .இது போலத்தான் நமது வாழ்க்கைச் சூழ்நிலைகளும் ரிவர்சு பொசிசனில், எதிர் இயங்கு நிலையில் வைத்துப் பார்க்க வேன்டும்.

6.மனிதன் தனக்கு வேண்டிய வெற்றிகளைக் கிரகிக்க அந்த வெற்றி அடங்கிய சூழ்நிலைகள் வேண்டும்.அல்லது தனது அதே கிரகித்தலை எதிர் நிலையில் வைத்து  வெற்றிக்கான  சூழ்நிலைகளை தனது  மனதில் உருவாக்கி  அதனை  புற உலகிற்கு அனுப்பி   வெற்றியை அடைவதற்கான சூழ்நிலைகளைப் படைக்கலாம்.இந்த  வெளித்தள்ளல் என்னும் சக்தி மூலமாக சூழ்நிலைகளை  வெளித்தள்ளும்  போது  அதன் வெற்றிக்காக எல்லாப்  பொருட்களும் ,மனிதர்களும்  மாறுவார்கள் .

7.வெற்றிகளுக்கான சுருக்க வழி  எதுவும் இல்லை என்றே நாம் கற்பிக்கப்பட்டுள்ளோம்.ஒரு மனிதனின் வெற்றியைத் தொடரும் இன்னொரு மனிதனின் பயணம் தொடர்பவனைப் பொறுத்து ஒரு சுருக்கு வழி தான்.ஏற்கனவே பயணம் செய்தவனின் அலைச்சல்களைப் பின் வருபவன் தொடரத் தேவையில்லை.அதே போல் மனித இனத்தைப் பற்றிய மனிதனின் புரிதல்கள் அவன் பெற இருக்கும் வெற்றிக்கான களங்களையும் ,வழிகளின் நீளத்தையும் சுருங்க வைக்கத்  தான் செய்யும்.மனிதனின் வெற்றிகள்  எதுவும் மனிதன் தொடர்புடையவைகளில் மட்டுமே.

8.படைத்தலும் பயன்படுத்தலும் நம்மிடம் தான் வெற்றியும் வெற்றிக்கான சூழ்நிலைகளும் நாம் தான் என்று  அதனைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்த்துக் கையாளும் போது எதுவும் எளிதாகின்றது.வெற்றிக்கான சுருக்க வழி ஆகின்றது.இந்த பதிவின் மூலமான புரிதல்களை உணர சுருக்க வழி இதனைப் படித்துப் புரிந்து கொள்வது மட்டுமே.சுருக்க வழிக்குக்கூட ஏதாவது சுருக்க வழிகள் இருக்க வாய்ப்பில்லாமல் இல்லை.

பழக்கங்களை சமாளிப்பது எப்படி?





பழக்கங்களை சமாளிப்பது எப்படி?

       
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் இது முதுமொழி.

எனவே நமது ஆரம்பகால பழக்கங்கள் புதிது புதிதாய் ஆழ்மனதில் தொடர்ந்து பதிந்து கொண்டே வருகிறது.
   
எதுவும் பழக்கமாகுவது கெடுதலா?
  
மனோதத்துவ முறையில் பழக்கம் என்பது மனதில் உருவாகும் ஒரு பதிவு.பெரும்பாலான நமது திறமைகள் பழக்கத்தின் ஆதாரத்திலேயே உருவாகின்றன.
  
அவற்றை இருவகைகளாக பிரித்து கொள்ளலாம் ஒன்று நல்ல பழக்கவழக்கங்கள்,மற்றது தீய பழக்க வழக்கங்கள்.முன்னது வளர பின்னது தேய அவனது வாழ்க்கையில் உயர்வும் நல்ல பல குண நலன்களையும் அடைகிறான்.
  
இரண்டிலும் மனபழக்கங்கள்,உடல் பழக்கங்கள் என இரண்டு வகை உண்டு.
 
நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் உணவு,உடை, நடை,உறக்கம்,உணர்வுகள்,பொழுதுபோக்கு என்ற பல நூறு செயல்களிலும் நமது மாறாத பழக்க வழக்கங்களை காணலாம்.
  
மேலோட்டமாக மாறாதது போல தோன்றினாலும் சில ஆண்டுகள் பிண்ணோக்கி பார்த்து ஒப்பிட்டால் நாம் நிறையவே மாறியிருப்பது தெரிகிறது.
 
ஆனால் சிலர் பெரிய அளவில் மாறாமலிருப்பது புரிகிறது. நன்மையான பழக்கங்கள் உடையவர் மாறாதிருத்தல் நல்லது.தீய பழக்கங்கள் உள்ளவர் திருந்தாமலிருந்தால் தீயது.
  
இயல்பாகவே நல்ல பழக்கங்களை தொடர்வது கடினமானது அவை நீர் மேல் எழுத்துக்களை போல நிரந்தமற்றவை.தீய பழக்கங்களை விடுவது அதைவிட கடினம்,அவை நம் உடன் பிறந்த உறுப்புகளை போல் ஒட்டி கொள்கின்றன வெட்ட வெட்ட துளிர்க்கும் நகம்,முடி போல குறையாமல் வளர்கின்றன.
  
தெளிந்த அறிவால்,தீவிர முயர்சியால்,உறுதியான தீர்மானங்களால் நல்ல பழக்கங்களை கற்கவும்,தீமை பழக்கங்களை விடவும் ஒவ்வொரு புதிய நாளும் வாக்குறுதி தரப்படும்.

பழக்கத்தினால் என்ன பயன்?
   
நாம் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் சாலையோடு அதை ஒப்பிடலாம். நமது நரம்பியல் மண்டலத்தின் வரைப்படத்தை பார்த்தால் டெல்லி  மாநகரத்தின் சாலைகளின் வரைபடம் போலத்தான் இருக்கும்.கை தேர்ந்த அனுபவமுள்ள ஓட்டுனர் ஒருவன் அந்த மாநகரத்திலும் சுலபமாக வாகனம் ஒட்ட பழகி விடுவார்.அது போலத்தான் நமது வாழ்வின் பழக்க வழக்கங்க்ளும்.
   முன்பு நாம் கண்டது போல ஒரு செயலின் கொள்கை குறிக்கோள் எனப்து இன்பம் என்ற எல்லையை தேடுவது அல்லது வலி,துன்பம் என்ற எல்லையை தேடுவது தவிர்த்து ஓடுவது ஒரு சாலையின் இடது பக்கம் இன்பம் அதன் வலது பக்கம் துன்பம். நமது வாழ்வு என்ற வாகனம் தினம் வழக்கி கொண்டு துன்பக்கரையை நோக்கி ஓடும்.அதை மீண்டும் திசை திருப்பி இன்பத்துக்கான ஓரத்திலே ஓட்ட முயல்கிறோம்.வாழ்வின் சவால்களை சந்திக்க சமாளிக்க நாம் படும் பிரயத்தளங்களை முயற்சிகளை இவ்வாறு பெயரிட்டார்கள்.
  
வாழ்வு என்பதை ஒரு எலியின் வாழும் வளை என்பார்கள்.ஒரு திறந்த தப்பிக்கும் பாதையை கண்டுபிடிக்க அது பல அடைப்பட்ட வழிகளில் போய் திரும்பி திரும்பி தடுமாறுகிறது.அது போலவே நாம் துன்பக்கரைபக்கம் போகாமல் இன்பக்கரை பக்கம் வருவதற்காக பல நூறு சமாளிப்பு வேலைகள் செய்கிறோம்.இது சில நேரங்களில் நன்மையாக முடிகிறது.அதை ஆஆஆஆஆஅ என்றார்கள்.ஆனால் பல நேரங்கலில் தீம்கையாக முடிகிறது அதிகமாக வழக்கி துன்பக் கடலில் போய் மூழ்கிறோம் இதை ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்றார்கள்.

மனம் என்பது பரிணாம வளர்ச்சியில் முதலில் சில பழக்கங்களை முயற்சி செய்து பார்த்தது இயற்கையாக உணவு,உறவு,உறக்கம் என்ற மூன்றும் இன்பம் தந்தன.
  
ஆனால் இன்றும் இதை அளவுக்கதிகமாக உபயோகித்து அழிபவர் அதிகம்.வாழ்வதற்காகவே சாப்பிடுகிறோம்.ஆனால் பலர் சாப்பிடவே வாழப் பிறந்தவர் போல சாப்பிட்டுக் கொண்டே சாகிறார்கள்.மனச் சோர்வில் பலருக்கு அதீத உணவு இன்பம் தருகிறது.கவலைகளை மறக்க,மயக்க மருந்தாக போதையாக அதீத உணவு,அதிக உறவு,அதிக உறக்கம் அவர்களுக்கு வடிகாலாகிறது.
  
விளைவு உடல் பருத்து தீவிர நோயாளியாகிறார் அது போலவே துன்பம் தவிர்க்க உடலுறவு இன்பத்தை நாடி அடிமையாகிறார்.தீராத காமம்,திருமண முன் உறவு,திருமணம் தாண்டிய உறவு,பிறரது மணைவிகள் தொடர்பு விலைமகளிர் தொடர்பு,பாலியல் வக்ரங்கள் பல வற்றில் அடிமையாகிறார் உடல் நோய் மன நோய் மற்றும் சமூகத்தால் புறக்கணிக்கபடவும் வாழ்வின் பாதை திசை மாறவும் இவரது உடலுறவு பழக்கங்கள் காரணமாகிறது.பாதிக்கப்படுவது பெண்கள் என்றால் தீமைகளின் விளைவுகள் மிக தீவிரமானது இயல்பான காமமே அளவு மீறி நோயாக தொடங்குவது வாலிப பருவம்தான்.
 
அதற்கடுத்தது உறக்கம் பலருக்கு தப்பிக்க தெரிந்த ஒரே வழி உறங்குவது.தூங்கியே வாழ்வின் தோற்றவர்கள் ஏராளம் இந்த மூன்றையும் அளவோடு உபயோகித்தால் நிச்சயம் நல்ல இன்பம் தரும்.ஒரு நாளில் மூன்றில் ஒருபங்கு உறக்கம் ஒரு நாளுக்கு மூன்று முறை உணவு மூன்று நாளுக்கு ஒரு முறைஒரே பெண் உறவு இவை முறையாக அளவிடப்பட்ட இன்பங்கள்.எல்லை தாண்டியவர் கண்டதெல்லாம் துன்பமே.   இன்னும் கொஞ்சம் மனிதன் பணம் பொருள் உறைவிடம் பாதுகாப்பு எனப்து வசதிகள் வளர்ந்ததும் மனதை சாந்தபடுத்த இசை, நாடகம்,கலைகள்,விளையாட்டு என்ற பொழுதுபோக்கு அம்சங்களை வளர்த்தான்.
 
இவை ஆரம்ப காலங்களில் நிச்சயமாக மனதுக்கு நலத்தையும் வளத்தையும் கொடுத்தன.ஆனால் காமம்,வியாபாரம்,போட்டி,பொறாமை,சூது என்ற நஞ்சு கலந்ததும் இவற்றில் பல பழக்கங்களும் தீமையாகி விட்டன.முக்யமாக விளையாட்டு பொழுது போக்காக தொடங்கிய சூதாட்டம்,சீட்டாட்டம்,லாட்டரி போன்றவை அதிக துன்பம் தரும் பழக்கங்களாக மாறின இசை, நாடகம்,கலைகள் எல்லாம் சினிமா என்ற பெரிய திரை மற்றும் சின்ன திரை மறைவில்  மனிதனை அடிமையாக்கி அவனது அமைதியை கெடுத்தன.
 
இலக்கியங்களும்,புத்தங்களும் காம கோபம் குரோதம் வன்முறை பழிவாங்கும் உணர்வுகளை தூண்டும்வசிய முறைகளாகியப் போனதால் அதில் அடிமையானவர்களும் துயர்களையே சந்தித்தார்கள்.
 
இறுதியாக ஆண்மீகம் புதிய ஒளியுடன் வந்து மனித மனங்களுக்கு ஆறுதளிக்க வந்தது.மத போட்டிகளும் மத குருமார்களது தந்திரங்களும் இறுதியில் உபயோகமில்லாத சடங்குகளுக்கும்,மூட நம்பிக்கைகளுக்கும்  மக்களை அடிமையாக்கிவிட்டது.    
  
உண்டு பார்த்தான் உறங்கிபார்த்தான் கண்டவர் யாரோடும் உறவு கொண்டு பார்த்தான் கூத்தாட்டம் கொண்டாட்டம்,சூதாட்டம்,சீட்டாட்டம் எல்லாம் முயன்று பார்த்தான்.புத்தகங்கள்,பெரிய திரை,சின்னதிரை அத்தனைக்குள் சென்று பார்த்தான்.ஆன்மீகம்,மந்திரம்,தந்திரம் எந்திரம்,ஆருடம்,சாதகம் அத்தனையும் மூழ்கிபார்த்தான் எத்தனை சமாளிக்க முயற்சிகள் ஆனால் பலருக்கும் திருப்தியடையவில்லை இஎத பழக்கங்களால்.
  
ஆராய்ச்சி செய்த மனிதன் எதற்கு தலையை சுற்றி மூகை தொட வேண்டும். நேரடியாக தொட்டால் என்ன என்று சிந்தித்தான் இன்பம் தரும் மூளை நரம்பு மண்டலத்தையே நேரடியாக இயக்கி பார்க்க ஆராய்ச்சி பல செய்தான்.காப்பி,தேநீர்,புகை,கஞ்சா எல்லாம் பயரி செய்து பழகி ருசித்தார்கள்.சோம பானங்கள் மதுரசங்கள் வடித்து மகிழ்ந்தார்கள்.
  
இப்படி மூளையை பொம்மலாட்டாம் ஆடும் பொம்மை போல ஆட்டி வைத்தார்கள்.திட திரவு வாயு  பொருள் என பல் நூறு வகை மருந்துகளை கண்டு பிடித்தனர் இந்த போதை விஞ்ஞானிகள் இந்து துயர குகைக்குள்ளே மாண்டவர்கள் கோடி கோடி.
  
இன்றும் போதையின் பட்டியல்கள் நீண்டு கொண்டே போகின்றன.அதிர்ஷ்ட வசமாக பெண்கள் இனம் இந்த சீரழிவுகளில் அதிகமாக சிக்கி கொள்ளாமல் தப்பித்து வருகிறது,ஆனால் அதுவும் இந்த நூற்றாண்டு எல்லை வரை தாக்கு பிடிக்காது என்று தோன்றுகிறது நாளுக்கு நான் நாட்டுக்கு நாடு பெண்களும் போதை பழக்கங்களுக்கு மேலும் மேலும் அடிமையாகி வருகிறார்கள்.
  
15 வயது முதல் 40 வயது வரை உள்ள மிக முக்யமான வாழ்வின் 30 வருடங்களில் பலர் இந்த போதையால் பாதை மாறிப் போகிறார்.
  
மிருகத்திலிருந்து சமூக மிருமாகி,மனிதனாகி சமூக மனிதனாகி புனிதனாகி மாமனிதானாகும் பரிணாம  வளர்ச்சியின் பல திட்டங்களுக்கும் கொள்கைகளுக்கும் இது போன்று தீமையான பழக்கங்கள் இடையூறாக இருக்கிறது.
  
நல்ல பழக்கங்கள் நாளும் குறைவதும் தீய பழக்கங்கள் தினம் தோறும் வளர்வதும் தெளிவாக தெரிகிறது.தனிமனிதன் மிது குடும்ப,சமுதாய,தேசிய,கலாசார கட்டுபாடுகள் தளர்ந்து தனிமனித சுதந்திரம் அதி வேகமாக வளர்கிறது.இது ஒரு வகையில் மிகவும் நன்மை தரும் தனிமனித சிந்தனையும் செயலும் விரிவடைந்து வளர மிக உபயாகமாகிறது நல்லவர்கள் மிகமிக வல்லவர்களாக மாறுவதற்காக இது பயன்படுகிறது.
        
ஆனால் கட்டவிழ்த்து விடப்பட்ட மனிதன் கால் போன போக்கில் கெட்டுவிட வாய்ப்பானது.எதுவும் தவறில்லை எவருக்கும் அடிமையில்லை என்ற தனிமனித தத்துவம் பல விதமான தீய பழக்கங்களை ஆராய்ச்சி செய்கிறது அதிலே அடிமையாகிறது.கொஞ்ச கொஞ்சமாக பெற்றோர்,ஆசிரியர்,அயலார் என்ற கண்காணிப்பு தளர்கிறது.அதிகாரிகள்,அரசினர் தனிமனிதனை பற்றி என்களுக்கு ஆர்வமில்லை அக்கறையில்லை அடுத்தவர்க்கு தொல்லை கொடுகாதவரை அவனைப்பறி எங்களுக்கு நினைவுமில்லை   என்று விட்டு விட்டார்கள்.
       
பலருக்கு வாழ்வதற்காக கிடைத்த விடுதலை தாழ்வதற்கு பயன்படுகிறது  நெரடியாக மனதை மயக்கி மகிழ்விக்கின்றன போதை பழக்கங்கள் இதன் விளைவாக இன்பத்தின் கொள்கை துன்பத்திற்கு பாதையாகி விடுகிறது கண் விழித்து பார்க்கும் முன்பு வாழ்வு எனும் வாகனம் திரும்ப முடியாத ஆழாத்துக்குள் போய்விடுகிறது.
       
ஆனால் இது நன்று இது தீது என்று எல்லோருக்கும் தெரியுமே? பஞ்சமாபாதகங்களில் கள்ளும் காமமும் முதல் என்று மூடருக்கு கூட புரியுமே?பழக்கங்களை சமாளிப்பது எப்படி அதுதானெ புரியவில்லை அதைச் சொல்லுங்கள் என்கிறார் பலர் ஆனால் அவர் கேட்கும் போது தீயபழக்கங்களில் கழுத்து வரை மூழ்கி போய் கிடக்கிறார்.
     
எனவே இளைமயில் அது கூட தாமதம்தான் குழைந்தை பருவத்திலேயே நல்ல பழக்கங்கள் விதைக்கபட வேண்டும் தீய பழக்கங்கள் தடுக்கப்பட வேண்டும் ஆனால் இதை சொல்வது சுலபம் செய்வதுதான் கடினம்.
     
பல பெற்றோர்கள் தனது குழைந்தைகள் வயதுக்கு மீறிய கேவலமான தகாத வார்த்தைகளை பேசுகிறது பள்ளியில் போய் கற்று கொண்டது என புகார் செய்கிறார்கள் ஆனால் குழந்தையை கேட்டால் இது வீட்டிலிருந்துதானே கேட்டறிந்தேன் என்கிறது
    
உண்மையில் தொப்பியை கழற்றி எறிந்தால் குரங்கும்தொப்பியை தொப்பியை கழற்றி எரியும் என்பது தான் நமக்கு தெரியுமே,குழந்தைகளும் அப்படித்தானே நம்மிடம் உள்ள தீய பழக்கங்களை கழற்றி எறிந்தால் எதிர்கால சந்ததிக்கே அது தெரிய வராதே
       
நன்னடத்தை என்பது கற்பதுதானே நல்ல பழக்கவழக்க‌ங்கள் அப்பா,அம்மா ஆசிரியர்,அயலார்களின் அச்சடித்த பிரதி போலத்தானே அடுத்த தலைமுறை வளர்கிறது இவர்களது நடத்தைகள் முன் மாதியாக அமைந்து விட்டால் பாடமும் தேவையில்லை.
  
இளம்வயதிலேயே நல்ல பழக்கங்களின் நன்மைகளையும் தீயபழக்கங்களின் தீமைகளையும் மனதில் ஆழமாக பதிவு செய்ய வேண்டும்.இது நேரடியான போதனைகளாக இருக்க கூடாது மறைமுகமான சுவையான செய்திகள் பயிற்சிகள் வழியாக இவை செயல்பட வேண்டும்.ஜந்தில் வளையாதது அய்ம்பதில் வளையாது என்பார்கள்.

 தீமையான பழக்கங்களை பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து கொடுக்கபட வேண்டும் புகைபழக்கம் உடல் நலத்துக்கு கெடுதி மதுபழக்கம் மன நலத்துக்கு கெடுதி என்று ஒப்புக்காக கடமைகள் எழுதி ஒட்டிவிட்டால் என் கடமை தீர்ந்தது என அரசு இருந்து விடக்கூடாது தீமை என விளம்பரபடுத்தும் வியாபாரிகளும் அரசும் அதை வியாபாரம் செய்வது ஏன்?
 
ஒரு கோலா பட்டியல் ஒரு துளி நஞ்சு என பதட்டபடும் அரசு முழு பாட்டிலும் நஞ்சான மதுவைப்பற்றி கவலைப்படாதது ஏன்
  
எனவே இந்த மாதிரியான கால கட்டத்தில் ஒரு தனி மனிதன் தன்னைத்தானே பாதுகாத்து கொள்ளவில்லை என்றால் வேறு வழியில்லை.யாரும் அவரைப் பற்றி கவலைப் பட போவதில்லை.தகுதியுள்ளதே வாழும் தகுதியற்றவை எல்லாம் சாகும் என்ற மிருகத்தனமான பரிணாம த‌த்துவம் முதலாளித்துவமாக நிலவுகிறது.
 
இன்று தனிமனித நடத்தை,ஒழுக்கம்,வலிமை அந்தஸ்து,பொருளாதாரம் பாதிக்கபட்டால் அவரது துணையும்,அவரது குழந்தைகளுமே அவரை புறக்கணிக்க த்யங்குவதில்லை இன்று தீய பழக்கங்களால் உடல் ந,மன நல பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பே சமூக பாதிப்புகள் நிறைய அவர் கெடும் போது யாரும் தடுப்பதில்லை அவர் கெட்ட பின்பு யாரும் கைகொடுப்பதில்லை.வெறுத்து ஒதுக்கப்பட்டு வீதிக்கு வரும் நிலை ஏற்படுகிறது.
 
வந்தபின் சமாளிப்பது கடினம் தீய பழக்கங்களை மன வாசலுக்குள் விடாமல் தடுத்து நிறுத்தவதே நல்லது.சுலபமானது அல்ல,ஆனாலும் உறுதியாக தடுப்பதே நல்லது.

Sunday, 5 January 2014

பெண்கள் சேமிக்க உதவும் முதலீடுகள்..?



தற்போது பெண்கள் ஆண்களுக்கு நிகராக நன்கு படித்து நல்ல வேலைக்கு செல்கின்றனர். வேலைக்கு செல்லும் பெண்கள் சம்பாதிக்கும் தொகையில் கொஞ்சமாவது எதிலாவது முதலீடு செய்தால் பிற்காலத்தில் உபயோகப்படுத்த வசதியாக இருக்கும். இதற்கான சில எளிய முதலீட்டு வழிகளை இங்கு பார்ப்போம்.


1. சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்க நகையாகவோ அல்லது தங்க காசாகவோ வாங்கலாம். இப்பொழுதெல்லாம் இ-கோல்ட் முறையில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இது தங்கம் வாங்குவதற்கு இணையான நன்மையை தரும். இதனால் லாக்கரில் தங்கத்தை வைத்து பயப்படத் தேவையில்லை.


2. பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். பங்கு பற்றிய விஷங்களை நன்கு அறிந்திருந்தால் பங்கு சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் செல்வத்தை அதிகரிக்க செய்ய முடியும். மேலும் நிறைய லாபம் சம்பாதிக்கலாம். எனினும் இதைப்பற்றி நன்கு தெரிந்தவர்களின் துணையுடன் இவ்வியாபாரத்தில் இறங்குவது நன்மை தரும். இல்லையென்றால் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள்.


3.நிரந்தர வைப்புத்தொகை (fixed deposits) தொடங்கலாம். இப்பொழுதெல்லாம் பல வங்கிகளில் வைப்புத் தொகையை குறிப்பிட்ட காலம் முடிந்தபின் திரும்பப்பெறும் போது 6 முதல் 8.5 சதவிகிதம் வரை வட்டி தருகிறார்கள். இதில் அதிக பணத்தை முதலீடு செய்யக் கூடாது. இரண்டிலிருந்து மூவாயிரம் ரூபாய் வரை முதலீடு செய்தாலே போதும். வருமான வரி தள்ளுபடி பெறலாம்.


4.பி.பி.எஃப் கணக்கில் பணத்தை போடலாம். வருடத்திற்கு எட்டு சதவிகித வட்டி கிடைக்கிறது. இது ஒரு பாதுகாப்பான முதலீடாகும். இதிலும் வருமான வரி விலக்கு உண்டு.


5. முதலீடு செய்வது பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்வது நல்லது. இதற்காக தனிப்பட்ட முறையில் நன்கு விசாரித்து எதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்பதில் கவனமாக இருக்கவும்.


6. பொதுவாக பெண்களுக்கு அரசானது பல்வேறு வரிச் சலுகைகளை வழங்கியுள்ளது. உதாரணத்திற்கு மாதம் சம்பாதிக்கும் தொகையில் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் வரை வரி செலுத்த வேண்டியதில்லை.


மேலும் காப்பீட்டு திட்டங்கள் போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்யும் போதும் திட்டங்களில் போடப்படும் பணத்திற்கும் வரிச் சலுகைகள் தரப்படுகின்றன. இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டு பெண்கள் சரியான விதத்தில் முதலீடு செய்ய பிற்காலத்தில் பெருத்த லாபத்தை அடையலாம்

குரைக்கும் நாயை அமைதிப்படுத்த சில வழிகள்!!!




குரைக்கும் நாயை அமைதிப்படுத்த சில வழிகள்!!!


வீட்டில் நாயை செல்லப் பிராணியாக வளர்க்கும் போது, அனைத்து நாய்களும் செய்யும் ஒரு எரிச்சலூட்டும் விஷயம் தான் குரைப்பது. நாயும் மனிதரைப் போல் தான். ஒரு கட்டத்தில் அதற்கும் அழுப்பு தட்டிவிடும். அப்போது அது தனக்கு போர் அடிக்கிறது என்பதை குரைப்பதன் மூலம் வெளிப்படுத்தும்.


அதுமட்டுமின்றி வெறும் போர் அடிக்கும் போது மட்டும் நாய் குரைப்பதில்லை. சந்தோஷமாக இருந்தாலும், கோபமாக இருந்தாலும், ஆபத்தின் போதும் கூட நாய் குரைக்கும். ஆனால் சில சமயங்களில் நாயானது மற்றவர்களுக்கு தொந்தரவு தரும் வகையில் எப்போதும் குரைத்துக் கொண்டே இருந்தால், அப்போது அதனை அடக்குவது என்பது சற்று கடினமான விஷயமே. அதற்காக குரைப்பதை நிறுத்த வேண்டுமென்று, அதனை அடித்தால் மட்டும் சரியாகிவிடாது. அதனை புரிந்து கொள்ள வேண்டும்.


ஏனெனில் நாய் எப்போதும் தேவையில்லாமல் தொடர்ச்சியாக குரைக்காது. சரி, இப்போது குரைக்கும் நாயை எப்படி சாந்தப்படுத்துவது என்று பார்ப்போம். அதிலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குரைத்துக் கொண்டே இருப்பதாக, அக்கம் பக்கத்தினர் சொன்னால் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கொடுத்துள்ளோம்.


* நீங்கள் வீட்டில் இல்லாத போது நாய் குரைக்காமல் இருக்க வேண்டுமானால், அதற்கு ரப்பர் பொம்மையைக் கொடுத்து சென்றால், அது அதனுடன் விளையாடிக் கொண்டிருக்கும். இதனால் நீண்ட நேரம் குரைக்காமல் இருக்கும்.


* அக்கம் பக்கத்தினர் வந்து சண்டை போடும் வகையில் உங்கள் நாய் குரைத்தால், அதனுடன் பேசுங்கள். பேசினால் நாய்களுக்கு புரியாது என்று நினைக்க வேண்டாம். அது மனிதரைப் போலவே நன்கு புரிந்து கொள்ளும் திறன் கொண்டது. எனவே அதற்கு புரியுமாறு சொல்லுங்கள்.


* நீங்கள் வெளியே செல்வதாக இருந்தால், வீட்டினுள் நாயை கட்டிப் போட்டிக்கும் போது, வீட்டில் ரேடியோவை போட்டு விட்டு செல்லுங்கள். இதனால் அது வீட்டில் ஒருவர் இருப்பது போன்று உணர்ந்து, தனிமையை தவிர்த்து, குரைப்பதை நிறுத்தும்.


* நீங்கள் அனைத்தும் செய்தும், ஏன் நீங்கள் அதனுடன் இருக்கும் போதே தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்தால், அதற்கு ஏதோ பிரச்சனை என்று அர்த்தம். ஆகவே அப்போது அதனை நன்கு கவனித்து, முடிந்தால் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்துப் பாருங்கள்.


* எதுவும் முடியாவிட்டால், நாயை பார்த்துக் கொள்ள ஒருவரை விட்டு செல்லுங்கள் அல்லது அதனை நன்கு பழகும் பக்கத்து வீட்டில் விட்டு செல்லுங்கள். இதனால் அது தனிமையை தவிர்த்து, குரைக்காமல் இருக்கும்.

கணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்....?




கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது. இந்த நிலை மாற குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை? கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன? குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி? குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன? வரவு,செலவை வரையறுப்பது எப்படி?


குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?


1. வருமானம்
2. ஒத்துழைப்பு
3. மனித நேயம்
4. பொழுதுபோக்கு
5. ரசனை
6. ஆரோக்கியம்
7. மனப்பக்குவம்
8. சேமிப்பு
9. கூட்டு முயற்சி
10. குழந்தைகள்
   
   
 கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?



1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது.
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா,தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
   
   
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?


1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
2. காலையில் ஆறு மணிக்கு முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8. அதிகாரம் பணணக் கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32. அதிகம் சினிமா பார்க்கக் கூடாது.
33. உடற்பயிற்சி செய்து உடம்பை சிலிம் ஆகவைத்துக் கொள்ள வேண்டும்.
   
   
பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி?


தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும். குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும் .'நீ ராசா அல்லவா? ராசாத்தி அல்லவா? ' என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். 'மக்கு, மண்டு, மண்டூகம் - போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.


பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
   

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?



பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.


1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
4. விரும்பியதைப் பெற இயலாமை.
5. ஒருவரையொருவர் நம்பாமை.
6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
9. விருந்தினர் குறைவு.
10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.
   
   
உங்கள் பங்கு என்ன?



உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.


1. அன்பாகப் பேசுவது.
2. பிறர் மீது அக்கறை காட்டுவது.
3. வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.
4. குறை கூறாமல் இருப்பது.
5. சொன்னதைச் செய்து கொடுப்பது.
6. இன்முகத்துடன் இருப்பது.
7. முன் மாதிரியாக நடந்து கொள்வது.
8. பிறரை நம்புவது.
9. ஒன்றாக உல்லாசப் பயணம் போக விரும்புவது.
10. பணிவு.
11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.
12. பிறர் வேலைகளில் உதவுவது.
13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.
14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.
15. சுறுசுறுப்பு.
16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.
17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.
18. நகைச்சுவையாகப் பேசுவது.
19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.
20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.
21. நேரம் தவறாமை.
22. தற்பெருமை பேசாமல் இருப்பது.
23. தெளிவாகப் பேசுவது.
24. நேர்மையாய் இருப்பது.
25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.

ஆத்ம சக்தி (Will Power)...??



இறைவன் மனிதனைப் படைக்கும் போதே அவனிடம் சகலவிதமான சக்திகளையும் வைத்தே படைத்திருக்கிறான். ஆனால் நாம்தான் நம்மிடமுள்ள சக்திகளைப் பற்றி தெரியாமலும், அதன் ஆற்றல்களை எப்படி வெளிக்கொணர்ந்து இயக்குவது என தெரிந்துகொள்ளாமலும் வாழ்க்கையில் பலவித ஏமாற்றங்களுக்கும், கஷ்ட நஷ்டங்களுக்கும் ஆளாகி அல்லல்ப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.


இறைவன் உள்மனம் மூலமாக இயங்கி நாம் பிறந்தது முதல் இறப்புவரை நம்மைக் காப்பாற்றி நம் உடம்பை இயக்கிக் கொண்டே இருக்கிறார். இந்த உண்மையை உணர்ந்துகொண்டு நம்மிட முள்ள சக்திகளை எப்படி உபயோகிப்பது எனவும் தெரிந்துகொண்டால் நாம் வாழ்க்கை யில் நமது கஷ்டங்களை எல்லாம் நிவர்த்தி செய்துகொண்டு ஆனந்தமாக வாழலாம்.


நம்மிடம் தேங்கிக் கிடக்கும் மகா சக்திகளை கண்டுபிடித்து அவைகளை நாம் உபயோகப்படுத்தி நமக்கு வேண்டிய செல்வங் கள், தொழில்கள், படிப்பு ஆகிய வசதிகளை மேம்படுத்திக்கொண்டு இன்பமாக வாழலாம்.


இதற்குத் தேவை திட நம்பிக்கையும், தைரியமுமே. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். நம்மேல் நமக்கே ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் ஆத்ம சக்தியை (will power) வளர்த்துக்கொள்ள வேண்டும்.


ஆத்ம சக்தி என்பது நம்மிடம் உள்ளது தான். அதன் ஆற்றல் அளப்பரியது. கண்ணுக்குத் தெரியாதது. உருவம் அற்றது தான். ஆனால் அதன் சக்தியை, மகிமையை உணர்ந்தவர்கள், அடைந்தவர்கள் மட்டுமே அற்புதங்கள் நிகழ்த்த முடியும்.


முதலில் நமக்கு மனோ திடத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒரு சுய நம்பிக்கை மந்திரத்தை முதலில் மனப்பாடம் செய்து மனதில் பதியவைத்துக் கொள்வோம்.


“சகல அறிவுகளுக்கும் ஊற்றாகிய
என் உள்மனமே
நான் நினைப்பதை முடிக்கும் வல்லமை
என் உள்மனதுக்கு உண்டு.
என்னால் முடியாதது ஒன்றுமே இல்லை.
நான் செய்வேன்; நான் செய்வேன்; என்னால்
எதுவும் செய்ய முடியும். என் சக்தி அபாரமானது
அந்த அபார சக்தியால் என்னால்
செய்து முடிக்க முடியும்; நான் செய்வேன்.”


இனி நாம் எந்த காரியத்தையும் செயல்படத் துவங்கும் முன் இந்த சுய நம்பிக்கை மந்திரத்தை ஒரு முறைசொல்லிவிட்டு மற்ற வேலைகளை ஆரம்பித்தால் எல்லாமே வெற்றிகரமாக முடியும்.


நம்மிடமுள்ள அளப்பரிய சக்தியை நமக்கு நாமே உணர்வதில் மனதை ஒருநிலைப் படுத்துதல் (Concentration) மற்றும் தன்னை அறிதல் (Know thyself) ஆகிய இரண்டு செயல்கள் முக்கியமானவை.


மனதை ஒருநிலைப் படுத்துதல் (Concentration)


மனதை ஒருநிலைப்படுத்துதல் என்பது ஒன்றிலேயே சூழ்ந்து சிந்தனையை சிதறவிடாமல் நிறுத்துவது ஆகும். ஒன்றை அடையவேண்டும் என்ற விருப்பமானது உறுதியுடனும், திடமுடனும் யாரிடத்தில் வேரூன்றி இருக்கிறதோ அவரே அந்த விருப்பத்தில் திட சித்தத்தை செலுத்தி தான் விரும்பியவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.


மனிதனால் முடியாத காரியம் எதுவும் இல்லை. நம்மால் எதையும் செய்து முடிக்கவும் முடியும்; அழிக்கவும் முடியும். மனித சக்தியைத் தவிர வேறு எந்த சக்தியானாலும் காரியங்களை செய்து முடிக்க முடியாது.


இந்த சக்தியை தெரிந்து பயன்படுத்தி பலவிதமான சித்துக்களையும் காட்டி மறைந்த பெரியோர்கள், ஞானிகள், சித்தர்கள், நாயன் மார்கள், ஆழ்வார்கள், மகான்கள் போன்றவர்கள் எல்லா மதத்திலும் தோன்றி மறைந்து இருக்கிறார்கள்.


இவைகளை தெரிந்தும், படித்தும், கேட்டும் இன்னமும் செயல்படாமல் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். காரணம் நம்மை நாம் அறியாததே. நமது சக்தியின் தன்மையை நாம் தெரிந்து செயல்பட்டால் இவ்வுலகில் நாம் சுகபோக வாழ்வு வாழலாம். அதற்கு,


1 ) முதலில் நமது எண்ணங்களை நமக்கு எது தேவையோ அதிலேயே நிறுத்தி வைக்க வேண்டும். மனதில் வேறு பல எண்ணங்கள் புகவிடாமல் மனம் அலைபாயாமல் – நமது என்ன அலைகளை சிதறவிடாமல் ஒரு பிடியாக நாம் நினைத்த காரியத்திலேயே கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.


2 ) ஆத்ம சக்தி என்ற நமது மனோதிட சக்தியை நமது எண்ணம் எதுவோ அதிலேயே இருக்கச் செய்ய வேண்டும்.


3 ) நமது விருப்பங்களை இடைவிடாமல் ஏற்றத் தாழ்வு இல்லாமல் சமநிலையில் வைராக்கியத்துடன் எண்ணி அதிலேயே ஊன்றி கவனத்தைச் செலுத்தி வரவேண்டும்.


4 ) நாம் விரும்பும் காரியம் முடியும்வரை அதிலேயே மனதை வைத்து செயல்பட வேண்டும். வேறு சிந்தனை கூடாது. எவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் மனதைத் தளரவிடாமல் நம்பிக்கையுடனும் வைராக்கியத்துடனும் இருந்து நினைத்ததை சாதிக்க வேண்டும்.


நமக்கு நன்மைகளை செய்யக்கூடிய ஒரு எண்ணத்தை மனதில் நிறுத்தி தொடர்ந்து அமைதியாவும், அழுத்தமாகவும் அந்த எண்ணத்தை பற்றியே மனதில் தியானத்துக் கொண்டு இருப்பதே மனதை ஒரு நிலைப்படுத்தும் நிலையாகும்.


இந்த மனதை ஒரு நிலைப்படுத்தும் விதத்தைப் பயிற்சிகளினால் தான் பழக்கத்துக்குக் கொண்டுவர முடியும். மனதை ஒரு நிலைப்படுத்தி நிற்பது கடினம். காரணம் மனதில் ஆயிரக்கணக் கான எண்ணங்களை வைத்துக்கொண்டு நம் சிந்தனையை பல வழிகளிலும் சிதரவிட்டுக் கொண்டு பலவற்றையும் எண்ணிக்கொண்டே இருப்பதுதான்.


நமக்கு எது வேண்டுமோ அந்த எண்ணத்தையே அடிக்கடி மனதில் எண்ணி அதே எண்ணத்தில் விடாப்பிடியாக இருந்தால் நாம் நினைத்ததை அடைய முடியும்.