Tuesday, 20 August 2013

உத்தரகாண்டில் 11 கிராமங்களை தத்தெடுத்த எல்லைப் பாதுகாப்பு படை!



உத்தரகாண்டில் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 11 கிராமங்களை எல்லைப் பாதுகாப்பு படை தத்தெடுத்தது.


உத்தரகாண்ட் மாநிலம் காளி நதிக் கரையில் அமைந்துள்ள காளிமத், கவில்தா, கோட்மா, சியான்சு, சிலோண்ட், குல்ஜெத்தி, கென்னி, ஜல்டலா, செüமசி, புயுன்கி உள்பட 11 கிராமங்கள் அண்மையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டன. இக்கிராமங்களை எல்லைப் பாதுகாப்பு படை தத்தெடுக்க முடிவு செய்துள்ளது.அங்கு சாலைகள்,பாலங்கள் அமைப்பது மட்டுமின்றி கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க எல்லைப் பாதுகாப்பு படை முன்வந்துள்ளது.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களில் எல்லைப் பாதுகாப்பு படையினர் முகாமிட்டு மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவார்கள்.சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிந்த பிறகே அவர்கள் அக்கிராமங்களை விட்டு வெளியேறுவார்கள் என்று எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த சிறப்பு பொறியியல் நிபுணர்கள் குழு ஒன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் உடைந்த அணைகள்,சாலைகளை சீரமைத்து போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுவர்.மழையால் சேதமடைந்துள்ள காளிமத் கோவிலை புதுப்பிக்கும் பணியிலும் எல்லைப் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்படுவர்.ஏற்கனவே துணை ராணுவ படையானது தங்களது ஒரு நாள் சம்பளமான ரூ.16 கோடியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நிதியாக வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது

. BSF adopts 11 villages in Uttarakhand 

**************************************************

 Delhi: BSF has adopted 11 villages in Uttarakhand and has deployed a contingent of its personnel to provide succour for the locals of the rain ravaged state. The border guarding force has not only created a number of communication infrastructure like bridges and roads, it has also improvised and started a number of civic facilities in flood hit villages of the Kalimath valley.

0 comments:

Post a Comment